‘தெய்வீகத் துகளை(God particle)’ கண்டுபிடித்துவிட்டதாக ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!

‘தெய்வீகத் துகளை(God particle)’ கண்டுபிடித்துவிட்டதாக ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!

4 Jul 2012 SWITZERLAND-SCIENCE-PHYSICS-PARTICLES-CERN

ஜெனீவா:விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை(Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன்(CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக நடந்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறித்து அறிவித்தனர்.

தாங்கள் தேடிக்கொண்டிருந்த ‘ஹிக்ஸ் போஸான்’ துகள்தாம் கண்டுபிடித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆரம்பக்கட்ட முடிவாகும். Continue reading “‘தெய்வீகத் துகளை(God particle)’ கண்டுபிடித்துவிட்டதாக ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!”

Advertisements

ஆ… ஆவ்….. கொட்டாவி!

 

வழக்கமாக அப்பாவின் ஹிம்சை தாங்கமுடியாமல் கடனே என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாவனை செய்யும்போது, சாப்பாட்டிற்குப் பிறகு, மதியம் முதல் வகுப்பில் ஆசிரியரின் பாடம் சுகமான தாலாட்டாகக் காதில் விழும்போது கொட்டாவி வருவது இயற்கை. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு கொட்டாவி விட்டால் நம்மை அறியாமல் அது தொற்றிக்கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? கொஞ்சம் கொட்டாவி விடாமல் படியுங்கள்! Continue reading “ஆ… ஆவ்….. கொட்டாவி!”

ஒலி அலைகள் (Sound waves)

நம்மைச் சுற்றிலும் காற்று இல்லாவிடில், எவ்வளவு உரத்த ஒலியானாலும் நம்மால் அதனைக் கேட்க இயலாது. நீர்வாழ் உயிரினங்களின் காதுகள் தண்ணீர் அலைகளின் ஊடே வரும் ஒலியைக் கேட்கும் வண்ணம் அமைந்துள்ளன. ஆனால் மனிதர்களின் செவிப்பறைகள் காற்று அல்லது வாயுக்களின் ஊடே வரும் ஒலியை மட்டுமே கேட்கும் வண்ணம் அமைந்து உள்ளவை. எனவே நம்மைச் சுற்றிக் காற்றோ, புகையோ இல்லாத நிலையில் நம் காதுகளுக்கு ஒலியைக் கேட்கும் ஆற்றல் கிடையாது.நாம் சாதாரணமாகக் கேட்கும் ஒலி நம்மைச் சுற்றியுள்ள காற்று, புகை ஆகியவை ஊடே பயணம் செய்து வரும் ஒலி அலைகளால் உண்டாகின்றவை. இந்த ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. இந்த அடிப்படை உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டு விட்டால் ஒலியின் உண்மைகள் பற்றியும், அதன் புதிர்கள் பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

Continue reading “ஒலி அலைகள் (Sound waves)”

WordPress.com.

Up ↑