இளம் விதவை

                          மணத்துணை வயாதவற்கு முன்பே இறந்துவிட்டால் – இளம் விதைவையாக உங்கள் வாழ்க்கைப் பயணம்.

(கட்டுரையின் எளிமைக்காக விதவை என்ற சொற்பதம் பயண்படுத்துகிறேன். இருந்தாலும் இளம்வயதில் தன் மணைவியை இழந்த ஆண்களுக்கும் இது பொருந்தும்)

இருமணம் சேர்ந்து ஒரு மணம் ஆன அந்த இனிய திருமண நாளில், இணைபிரியாது மரணம் வரை ஒன்றாகவே வாழ்வை நிறைவு செய்வோம் என எம் கற்பணை உலகம் விரிந்து கொண்டே போனது.

அன்றிலிருந்து தீட்டங்களை ஒன்று சேர்ந்தே தீட்டினோம். பிள்ளைகளை பெறுவது, எங்கு வாழ்வது, வயாதான காலத்தில் என்ன செய்வது என எல்ல திட்டங்களையும் வகுத்துக்கொண்டோம்.

எம் திட்டங்களில் , முன்னேற்பாடுகளில் மரணம் என்னும் எதிரியை நாம் சிந்திதுக் கூட பார்த்திருக்க மாட்டோம். அது அப்படி இருப்பது சரிதான். கவலைகளை குறித்து சிந்திப்பது, வாழ்வை ருசிக்க தடையாக இருந்திருக்கும்.

மரணம் என்ற எதிரி எதிர்பாரத சமயத்தில் நம் துணையை அழைத்து சென்றுவிட்டால், நாம் நிலைகுழைந்து போய்விடுகிறோம்.

ஒரு குழிக்குள் விழுந்தது போன்ற ஓர் உணர்வு. அந்த குழியிலிருந்து வெளி வரவே முடியாது என தோன்றுகிறது வாழ்க்கை.
எவ்வளவு இழமையில் நாம் இந்த கிடங்கில் வீழ்கிறோம், அந்த அளவுக்கு ஆழமான கிடங்காக அது தெரிகிறது, இருக்கவும் செய்கிறது.

                                                     

                                            இழப்பு என்னும் கொடுரம் நம்மை பாதிக்கும் விதம்.

இழப்பின் கொடுரத்தை இன்னும் அதிக கொடுமையாக்குவது….

-மணத்துணையை இழந்ததால் பொருளாதர நெருக்கடிக்குள்ளாவது.
-சிறுவயது பிள்ளைகள்
-உதவதற்கு பெற்றோர்கள், நண்பர்கள் இல்லாதிருப்பது
-வேலை பறிபோகுதல்
-மரணம் விபத்தினால் திடிரென ஏற்படுவது
-துணையோடு சேர்ந்து நிறைய திட்டங்களை போட்டிருந்தோம்.
-துணையுடனான உறவு மிக மிக அண்னிய உண்ணியமாக இருப்பது.

                                               இழப்பு ஏற்படும் போது  நடப்பதுஎம் துணையை இழந்த பின் வாழ்வில் சில கட்டங்களையும், கவலைகளை சமாளிக்கும் போரட்டங்கள் பலவற்றையும் நாம் கடந்து செல்கின்றோம்.

1 .கட்டம்: நியத்தை ஏற்க மறுக்கும் மனம், நடந்ததை மறுக்க மனம்.

நடந்தது எல்லாம் வெறும் கொடுரமான கனவு, எல்லாம் திரும்பவும் பாளைய நிலைமைக்கே மாறிவிடும் எண்ற நம்பிக்கை . நடந்த சம்பங்களை ஏற்க மறுக்கும் இதயம் திண்டாடுகிறது. அதிர்ச்சியில் உறைந்து போய், உயிர் அற்ற உடலாய் உலாவித்திரிகிறோம்.

துணையின் குரலை கேட்பது போன்று இருக்கிறது . அவரை தெருவில் தெரிவது போல இருக்கிறது. அந்த நொடிகளில் எல்லாம் நாம் உடைந்து போய்விடுகிறோம். இன்னும் சிலர் தாம் உடைந்து போய் இருப்பதை உணராமலையே இருக்கிறார்கள்.

2. கட்டம்: பொங்கியெழும் உணர்வுகள்.

எம் உணர்வுகள் நம்மை மூழ்கடிக்கின்றது. சந்தேகமும் பயனும் நம்மை கவ்விக்கொள்கிறது. எதிர்கலாத்தைக் குறித்த நிச்சயம் இல்லாத தன்மை. எல்லாம் விதி என நினைத்து விருப்பமின்றி சகித்துக்கொள்வது. நம்மை போல மரணத்தில் தன் துணையை இழக்காத மனிதர்களை பார்த்து பொறாமைப்படுகிறோம். பாதி மனிதாக உணருகிறோம். வாழவே தகுதியற்றவர்கள் என என்னுகிறோம்.

எம்மால் சரியாக தூங்க முடியவில்லை அல்லது அளவுக்கு அதிகமாக தூங்குகிறோம். சாப்பாடில் குறைவு படுகிறோம் அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். மணம் அமைதியின்று இருக்கிறது. ஓவ்வறு நாளைக்குறித்தும் பயப்படுகிறோம். ஒழுங்காக மலசலம் செல்வது இல்லை. தலைவலி , வயிற்று வலி, இதயம் படபடுத்தல் ஏற்படுகிறது. இது போல பல இன்னலகள்.

ஏன்? என்ற கேள்வி நம்மை குடைகிறது. இடைவெளி இன்றி மணத்துணையின் நினைவுகளை வந்து போய்க்கொண்டிருக்கிறது. நண்பர்களிடமிருந்து நம்மை தனிமைப் படுத்துகிறோம். நம் கவனத்தை திசை திருப்புவதற்காக எதாவது காரியங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.

3.கட்டம்: புதிய சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

நடுக்கடலில் இருப்பவருக்க் கரை தெரிவதுபோல இப்போது நமக்கு இருக்கிறது. தனியாக சில வேலைகளை சாதிக்க முடிகிறது. கவளைகள், சந்தேகங்கள், சகித்திருப்பது மெதுவாக கடந்த காலமக ஆக ஆரம்பிக்கிறது. நாள் முழுதுமே இழப்பைக் குறித்த சிந்தனைகள் இனிமேலும் இருப்பதில்லை.
புது பலத்தை மெதுவாக உணருகிறோம். புதிய விடயங்களில் கவணத்தை செலுத்த முடிகிறது. எதிர்காலத்தைக் குறித்தும் யோசனைகள் செய்ய முடிகிறது.

4. கட்டம்: புதிய சமநிலை

வாழ்க்கைக் ஒரு அர்த்ததை மீண்டும் கண்டு கொள்கிறோம். வாழ்க்கையை குறித்த புதிய கண்ணோட்டம் தோன்றுகிறது. முன்பு போல் இனிமேலும் வாழ்க்கை இருக்க போவதில்லை என நினைக்கிறோம், இருந்தாலும் புதிய கோணத்தில் வாழ்க்கையில் திருப்தியை காண முயற்சிக்கிறோம்.
காலம் காயத்தை ஆற்றுவதில்லை

ஒவ்வறு கட்டமும் தானாகவே கடந்து செல்வதில்லை. சில கட்டங்களில் சிலர் நீண்ட காலம் தரித்து நிற்கிறார்கள்.

கடந்த கால ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதர்களை நாம் சில வேலைகளில் சந்தித்திருக்கலாம். அந்த காலத்தைப் போல இருந்தால் நல்லா இருக்கும் என்று சிலர் பெருமூச்சு விடுகிறதை நாம் கவனித்திருப்போம்.
இன்னும் சில்ர, இதெல்லாம் ஏன் எனக்கு நடக்கவேண்டும் என்று சிந்தனையில் இருந்து வெளிவராமல் தவிக்கிறார்கள்.

இன்னும் சிலர் தங்கள் கவளைகளை வெளியில் சொல்லாமல், மனதுக்குள் வைத்தே புளுங்கிறார்கள். இதனால் சிலவேலைகளில் மதுபாணத்திற்கு அடிமை ஆகிறார்கள். அல்லது அமைதியை தரும் மருந்துகளுக்கு அடிமை ஆகிறார்கள்.
இளம் விதவைகளின் கவலைகள் ஏன் அதிக பாரமாணது.

நம் சமுதாயம் ஒரு அன்பானவர் இறக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே நம்ம தயார் படுத்துவதில்லை, அதுவும் இளமையிலே உறவு இற்ந்து விட்டால் என்ன செய்வது என முன்கூட்டியே நாம் தயாராக சிந்திது இருப்பதில்லைல்
மரணத்தில் துணையை இழந்தவரை எப்படி ஆறுதல் படுத்துவது என்று அறியாமல் நண்பர்கள் கூட்டம் தவிப்பது இன்னொறு அவலம்.

துக்கத்தில் இருப்பவர், மகிழ்ச்சியான அல்லது பொழுது போக்கு விடயங்களில் பங்குகொள்ளாமட்டார். அல்லது எதிர்கால திட்டங்களில் நாட்டமாக இருக்க மாட்டார்.
சில நணபர்கள் துக்கத்தில் இருவர்களிடம் இருந்து விலகி செல்கிறார்கள். வேறு சிலர், ஆறுதல் தறும் வார்த்தைகளால் உறசாகப்படுத்த விரும்புகிறார்கள். ” நீ இன்னும் இழமையான மனிதன் ” மெதுவாக துக்கத்திலிருந்து மீண்டு வா. வாழ்க்கை அருமையானது. உன் பிள்ளைகளுக்கு நீ வேண்டும் என்று சொல்வார்கள்.
சிலர் பெற்றோர்களின் வீட்டுக்கு திரும்பி செல்கிறார்கள். உதவி செய்யும் பெற்றோர்கள் சிலர், தங்கள் பிள்ளை சொந்த வாழ்க்கை ஒன்றை வாழ்ந்திருந்தார்கள் என்பதை நினைவில் வைக்க மறந்து விடுகிறார்கள்,

உறவுகளும் நண்பர்களும் எப்படி உதவ முடியும்?

துணையை இழந்த நபரை இப்படித்தான் ஆறுதல் படுத்த வேணுட்ம் என்னும் ஒரு விதி முறை இல்லை.

எதுவுமே நட்க்காத போல, அல்லது துக்கபடுவோர்களிடமிருந்து நாம் விலகி ஒருபோதும் சென்று விடக்கூடாது.
உதவியற்று தவிக்கும் அந்த நபருடன் , உங்களுக்கு உதவ விரும்புகிறேன் , இருந்தாலு உங்களை இந்த சமயத்தில் புன்படுத்தி விடுவேனோ என்று பயப்படுகிறேன் என்பதை தெரிவிக்கலாம்.
முக்கியமாக அவர்களிடம் மீண்டும் மீண்டும் சென்று உதவ விரும்பவதை சொல்லுங்கள். அவர்களுக்காக தேவையான் பொருட்களை வாங்க செல்வது, அவர்களுடைய பிள்ளைகளை, பார்த்துக் கொள்வது, கடன் பிரச்சனைகளை சமாளிக்க உதவி செய்வது , போன்ற காரியங்களை செய்யலாம்.

உதவியற்ற அந்த நபரின் கவலைகளை அது ஒன்றும் பெரிய விடயம் இல்லை என்பது போல காட்ட முயற்சிக்க வேண்டாம். கவலையில் இருக்கும் அந்த நபர், நியாயம் இல்லாமல், அல்லது கோபமாக சில வேளைகளில் நடந்து கொள்ளலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
அவர்களுடைய கோபங்களஒ பெறுத்துகொள்ளுங்கள். அவர்களின் உணர்வுகள் ஒரு நிலையில் இருக்காது. அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம், அவர்களோடு பேச நீங்கள் தயாரக் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்.

வழியை சமாளித்து புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பது எப்படி?

சோகத்திலிருந்து மீண்டு, மறுபடியும் சமநிலையன வாழ்வுக்கு வருவதற்கு சராசரியாக மூறிலிருந்து ஜந்து வருடங்கள் ஆகலாம்.

எதிர்காலத்தை தனிமையில் சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு வலியைத்தருகிறது.

புதிய பளக்கங்களையும் ,உணர்வுகளையும் ஏற்றுக்கொள்வது ஆரம்பத்தில் கடினமாக இருக்கு.
(இரவு இரவாக ரேடியோவை போட்டு வத்திருப்பது, துணையின் இரவில் உடுக்கும் உடையை அணிந்து கொண்டு உறங்குவது போன்றவை)
வலியை சமாளிப்பதற்கு மருந்து மத்திரைகளையோ, அல்லது மதுபாணத்தையோ நாடுவது தீர்வாகாது.
பகலிலும் இரவிலும் வரும் பயங்கள் சந்தேகங்களை எழுதி வைப்பது ஒரு உதவியாக இருக்கும்.

துணையை இளமையிலே இழந்த மற்றவர்களுடன் உறையாடுவதும் உதவியாக இருக்கு.

ஒவ்வறு நாளும் என்ன காரியங்களை செய்து முடிக்க வேண்டும் என்று எழுதி வைப்பது உதவும்.
நம் உடல் , சத்துள்ள உணவுகளில் நாம் இப்போது அக்கறையாக இல்லாத போதும், சத்துள்ள உணவுகள் அவசியம்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: