Posted in Windows

Facebook

Chelli Sreenivasanhttps://yarl.files.wordpress.com/2015/10/4e647-img_0030.jpg
 ரொம்ப நாளாச்சேன்னு

தோழி ஒருத்தியோட வீட்டுக்கு போனேன்…
காலிங் பெல் அடிச்சேன் திறக்கல..
மொதல்ல டொக் டொக்குன்னு பதவிசா தட்டினேன்.திறக்கல.
ஓங்கி அடிச்சேன்..ம்ஹூம் திறககல
கதவ உலுக்கி தடார்னு இடிச்சேன்..யார்கிட்ட.?
“என்ன இவ வீட்டுக்கு வான்னு சொல்லிட்டு எங்கே போனா”னு
லேசா முகம் சுளிச்சிகிட்டே மொபைல்ல கூப்டு கேக்கலாம்னு
அவ நம்பர போடற சமயம் அவ அந்தப் பக்கம் ஜன்னல் வழியா ,

“வாடி வா..இந்த பக்கம் வா”ன்னு கை அசைச்சா.

சரின்னு போனேன்..

“கதவ திறடி”

“இதான்டி வாசல்..அதோ இருக்கு பார்.. அந்த ஸ்டூல எடு..அதுல ஏறி உள்ளே வா”

“எதுக்குடி?”

“வா சொல்றேன்”

சரின்னு அந்த ஸ்டூல ஏறி உள்ளே இறங்கினேன்..

“என்னடி இதெல்லாம்?”

“வீட்டுல வாஸ்து சரி இல்லையாம்அதான் வாஸ்து படி எல்லாத்தையும் மாத்திட்டோம்…”

“அதுக்காக ஜன்னல வாசலா மாத்திடறதெல்லாம் ஓவர் டி”

“இல்லபா வாஸ்து படி இங்கே தான் வாசல் இருக்கனுமாம்..ஜன்னலுக்கு கீழே கான்க்ரீட் பீம் போகுது..இடிக்க முடில..மெஷின்ல தான் கட் பண்ணனும்..ஆள் வரணும்..”

“ஏ இங்கே மொதல்ல டாய்லெட் இருந்துச்சு இல்ல?”

“ஆமாம் கிச்சனாக்கிட்டோம்..”

“இப்ப சாப்பாடு நல்லா ருசியா இருக்காக்கும்”

“……..”

“டாய்லெட் எங்கே”

“பால்கனி இருந்துச்சே அங்கே ”

“அதை அடச்சுட்டீங்களா..அய்யோ நல்ல வியூ..நல்ல வெளிச்சமா இருந்துச்சே பா இந்த இடம்..சரி ரூமுக்கு வெளிச்சம் எப்டி? ”

“டாய்லெட் ல ஒரு வென்டிலேட்டர் வெச்சிருக்கோம் ..அது வழியா..”

“அது வழியா?”

“வர்ற வெளிச்சம் தான்”

இப்படி ஹால் தரைல ஒரு பக்கம் உயர்த்தி ..கிச்சன் இருந்த இருந்த இடத்துல பெட்ரூம்னு வீடே தலை கீழா மாறி புழங்குற வசதி,வெளிச்சம் குறைந்து , முன்பு இருந்த களை,லட்ஷணத்தை இழந்து இருந்தது அந்த வீடு.

காபி குடுத்தா.

டபராளேர்ந்து டம்ளருக்கும் டம்ளர்லேர்ந்து டபராக்கு ஆத்தி என்னை அறியாமலேயே டபராலேர்ந்து காபியை உறிய ஆரம்பித்தேன்..

“என்னடி டபராவ உறியரே..லூசு “ன்னு

டபரா டம்ளரா மாறி இருந்தத பார்த்து அவ சிரிச்சா ..
டாய்லெட் கிச்சனாக மாறி இருந்ததை பார்த்து நான் சிரிச்சேன் மனதுக்குள்..

கொஞ்ச நேரம் பேசிட்டு மீண்டும் ஜன்னல் வழியா ஸ்டூல் போட்டு இறக்கி விட்டா..வீட்டுக்கு வந்துட்டேன்….

மகா பாரத்ததுல பஞ்ச பாண்டவர் அரண்மனையை கட்டினது யார் தெரியுமா ?
வாஸ்து சாஸ்திர பிதா மாயுனி மயன்..ஆனா அவங்க பதினாலு வருஷம் காட்டுல தான் இருந்தாங்கன்னு
சொல்ல தோணிச்சு…சொல்லல..

Chelli Sreenivasan

ஆசிரியர்:

பின்னூட்டமொன்றை இடுக