இணையத்தில் விரியும் தமிழ் நூலகங்கள்

இணையத்தில் விரியும் தமிழ் நூலகங்கள்  நூலகம்

சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாகி வருகின்றன. பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார்கள். அதிலும் இந்திய மொழிகளில் தமிழ் நூல்களே அதிகமாக மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமை.  உலக மின்னியல் நூலகம்உலக மின்னியல் நூலகம் (http://catalog .crl.edu) என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 – மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும் உள்ளன. இவையன்றி உலக மைய நூலகத்தில் 171 -நாடுகளிலுள்ள 72,000 நூலகங்கள் இணைக்கப் பட்டுள்ளன என்று முனைவர் கு. கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.  தமிழ் மின்னியல் நூலகம்உலக மொழிகளில் கணிப்பொறியையும் இணையத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் மொழிகளில் செம்மொழித் தமிழும் ஒன்று. இன்று இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாக்கி உலகத் தமிழ் மக்களுக்கும் பிற மொழியாளர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது தமிழ் மொழியாகும். அந்த வகையில் தமிழ் மின்னியல் நூலகம் இணையத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளது.  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்தமிழ் மொழி ஆராய்ச்சிக்கென்று சிகாகோ பல்கலைக் கழகத்தினர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (http://www.lib.uchic…hasia/rmrl.html) என்ற பெயரில் 1994-ல் தொடங்கினர். இந்த ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்கள் இடம்பெற்றுள்ளன.  மதுரைத் திட்டம்கே. கல்யாணசுந்தரம், முனைவர் பி. குமார் மல்லிகாருசுணன் என்ற இருவரால் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருக்குறள், அவ்வையார் பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள் படைப்புகள், உரைநூல்கள்) சுமார் 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன. (http://www.projectmadurai.org)  தமிழ் இணையக் கல்விக்கழகம்17.02.2001 அன்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோன்றியது. இது வெளி நாட்டு மாணவர்கள் தமிழ்மொழியைப் பயிலும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இவற்றில் மின்நூலகம் என்ற பகுதியில் தமிழ் நூல்கள் மட்டுமின்றி தமிழ் நூல்களின் ரோமன் வடிவம், அகராதிகள், கலைக்களஞ்சியம், கலைச்சொல் தொகுப்புகள், சுவடிக் காட்சியகங்கள், பண்பாட்டுக் காட்சியகங்கள், பயணியர் போன்ற உட்தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.(http://www.tamilvu.org) இந்நூலகத்தில் இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதிநெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியங்கள், தமிழ் உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. தமிழ் மரபு அறக்கட்டளைதமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org) எனும் நிறுவனம் 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் உலகில் இருக்கும் ஓலைச்சுவடிகள், அரும்பெரும் பழைய நூல்களை நகல் எடுத்து மின் பதிப்பில் இணையத்தில் வெளியிடுவது ஆகும்.  நூலகம்.நெட்ஈழத்தில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களையும், இதழ்களையும் மின் வடிவமாக்கி பாதுகாக்க இது செயல்படுகிறது.(www.noolaham.org) இதை உருவாக்கியவர்கள் தி. கோபிநாத், மு.மயூரன் ஆவர். 2005-ல் தொடங்கியது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன.  இந்திய மின்நூலகம்தமிழ் இணைய மாநாட்டுக் குழுவால் தோற்றுவிக்கப்பட்டது இந்திய மின் நூலகமாகும். ஞானாமிர்தம், வேதாந்த நூல்கள், சைவசித்தாந்த நூல்கள், சோதிட நூல்கள், குணவாகடம், ஜெக சிற்பியின் புதினங்கள், பயண இலக்கிய நூல்கள் என 223-தலைப்புகளில் நூல்களை மின்பதிப்பாக்கி வெளியிட்டுள்ளனர்.(www.dli.ernet.in)  சென்னை நூலகம் கோ. சந்திரசேகரன் என்பவர் 2006-ஆம் ஆண்டு இதை தொடங்கினார். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், ஐஞ்சிறு காப்பியங்கள் இடம்பெற்றுள்ளன. யாப்பருங்கலக்காரிகை, நால்வர் நான்மணிமாலை, திருவிசைப்பா, திருவுந்தியார் கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்கள் கிடைக்கின்றன.கம்பர், திருஞானசம்பந்தர், திரிகூடராசப்பர், குமரகுருபரர், அவ்வையார், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் படைப்புகளும் கிடைக்கின்றன. (www.chennailibrary.com)  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் Journal of Tamil Studies -ல் 1972 முதல் வெளியான ஆய்வுக் கட்டுரைகளும், புத்தக மதிப்புரைகளும் சுமார் 9000 பக்கங்கள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழியல் என்ற பக்கத்தில் இதனைப் பார்க்கலாம்.( http://www.ulakaththamizh.org) தெற்காசிய மின்னியல் நூலகம் (www.dsal.uchicago.edu)என்ற பெயரில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு நூலகம் உள்ளது. மலாயா பல்கலைக்கழகமும் ஒரு மின்னியல் நூலகத்தை அமைத்துள்ளது.  http://tamil.thehind…e?homepage=true

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: