தியேட்டர்களில் வாழ்க்கை நடத்தியவர்கள்

https://i2.wp.com/mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/2fc4d3d5-0713-4cd6-81a9-50fcf1041fba_S_secvpf.gifஅஞ்ஞானவாசம் முடிந்த சந்தோசம். ஆறு ஏழு வருஷ கால . ஜரோப்பிய நாடொன்றின் குக் கிராமத்தில் அங்கையே கட்டயாம் காலந்தள்ள வேண்டும் என்ற நிலையும் ஒழிந்து எங்கையும் போய் வரலாம் என்ற நிலை வந்த பொழது கனடாவுக்கு விடுமுறைக்கு சென்றேன்.அங்கு எனது தம்பியிடம் மிளகாய் தூளும் கருவேப்பலையும் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட 40 கிலோ மீற்றர் சென்றால் தான் முடியும் என்று சொன்னேன். அப்படி வாழ்ந்த கிராமத்தின் நன்மை தீமைகளை பலதும் பத்தும் கதைத்து கொண்டிருந்த பொழுது கேட்டான் …தமிழ் படங்கள் தியேட்டரில் பார்க்க வசதி இல்லையா .என்று…

தமிழ் படங்கள் வெளிநாட்டில் தியேட்டரில் ஓடுகிறதா..என்ற அதிசயத்துடன் வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தேன்

இவையள் ஊரிலை தியேட்டர்களிலையே வாழ்க்கை நடத்தியவர்கள்… இவ்வளவு காலமும் வெளிநாட்டு வந்ததுக்கு தியேட்டரிலை படம் பார்க்கவில்லையாம் மிகுந்த பரிதாப உணர்ச்சியுடன் அண்ணணை கூட்டி கொண்டு போய் படம் காட்டுவமே என்று கனடாவில் காட்ட வேண்டிய முக்கிய இடம் போல தன் மனைவியிடம் கூறுவது கேட்டது

இவன் தியேட்டர்களில் வாழ்க்கை நடத்தியவர்கள் என்றும் கூறும் பொழுது இது புகழ்ச்சி அணி வசனமா அல்லது இகழ்ச்சி அணி வசனமா என்று ஆராய்ந்து வெட்கப் பட வைக்கவில்லை.

. சிறு வயதில் இருந்தே திரைக்குள் நம்மளை தேடும் முட்டாள் தனமான அதி கூடிய சினிமா மோகத்தில் யாழில் உள்ள பல தியேட்டர்களில் படம் பார்க்க அலைந்ததை அவன் அப்படி கூறுகிறான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் செய்தது.

ஊரில் எங்களுக்கு கால் நடை தூரத்தில் உள்ள சந்தியில் இரு தியேட்டர்கள் இருந்தன இங்கு தான் எனது திரைபடம் பார்க்கும் சரித்திரம் ஆரம்பமானது , அந்த காலங்களில் திரைபடம் பார்ப்பதும் மாமிச ரொட்டி கடைக்கு சென்று சாப்பிடுவதும் மகா
பஞ்சமா பாதகத்தில் ஒன்றாக கருதுவார்கள்.ஆனால் மற்ற என்னோட்டை ஆக்களுக்கு இல்லாத சுதந்திரத்தை எனது பெற்றோர்கள் தந்த காரணத்தனால் அந்த சிறு வயதிலையே நன்றாக படம் பாரப்பேன் .

மாணவர்களகாக இருப்பவர்கள் தியேட்டரில் கலரியில் இருந்து படம் பார்ப்பதை கெளவரவ குறைச்சலாக கருதுவார்கள்,அடிக்கடி படம் பார்ப்பவர்களுக்கு செக்கன் கிளாஸ் ,பெஸ்ட் கிளாஸ் , றிசெர்வ் பல்கனி என்று டிக்கட் எடுத்து கட்டுபடி ஆகாது என்றுது போக…அந்த வயதில் என்ன வீட்டில் பொக்கற் மணியா தரப் போறார்கள்.

நான் அறிய கலரி டிக்கட் 55 சதமோ 65 சதமாக ஆரம்பத்தில் இருந்தது.இந்தியாவின் கிராமங்களில் இருப்பது போல் முன் வரிசை கலரி தரையோ மணலோ போட்டிருப்பதில்லை ,,ஆனால் பல நூறு மூட்டை பூச்சி வாழ்க்கை நடத்தும் வாங்கு போட்டிருப்பார்கள்.

இந்தியாவில் a சென்டர் b சென்டர் போல யாழ்நகரில் படம் ஓடிய பிறகு இரண்டாம் சுற்று வடமராட்சி உள்ள தியேட்டர்களில் திரையிடுவார்கள். அதற்க்கு பின் தான் மற்ற யாழ் குடா நாட்டின் மற்ற தியேட்டர்களில் திரையிடுவார்கள். அத்தோடு இன்ன இன்ன விநியோகஸ்தரின் கொம்பனி படங்கள் என்ன என்ன தியேட்டரில் ஓடும் என்று அநுமானிக்க கூடியதாயிருக்கும்.

குணரத்தினத்தின் சினிமாஸ் கொம்பனி படங்கள் கொழும்பில் கிங்ஸ்லி கொட்டாச்சேனை , பிளாசா வெள்ளவத்தை , கெப்பிட்டல் போன்ற தியேட்டர்களிலும்
யாழ்ப்பாணத்தில் வெலிங்கடன் ,லிடோ
இந்த தியேட்டர்கள் இப்பவும் இருக்கோ தெரியாது .ஆனால் தினசரி பத்திரிகையின் மூன்றாம் பக்கத்திலும் வானொலி விளம்பரங்களிலும் அந்த காலங்களில் முக்கிய இடத்தை பிடிக்கும்

சிலோன் தியேட்டர் படங்கள் கொழும்பில் செல்லமாகால்,கொட்டாஞ்சேனை நவா கொம்பனித்தெரு

யாழ்ப்பாணத்தில் வின்ஸர் ,ரீகல்

சிலோன் என்டர்ண்மண்ட் தியேட்டர் கொம்பனிபடங்கள்

கொழும்பில் சென்டரல் மருதானை
யாழ் நகரில் ராணி ,மனோகரா

வடமராட்சி உள்ள தியேட்டர்கள்
லக்சிமி ,மஹாத்மா , யோகநாயகி ,றஞ்சனா, சென்றல்,புலோலி சினிமா

சரி என்று சொல்லி கனடாவில் தமிழ் படம் பார்க்க சென்றால் படம் ஒழுங்காய் பார்த்தது என்றா நினைக்கிறீங்கள்

அங்கு படம் பார்க்க வந்தவர்களின் தூசண மழையத்தான் கேட்க முடிந்தது

இதை பார்க்கும் போது அந்த காலம் என்னோடு கலரியில் படம் பார்த்தவர்கள் நாகரிகமாக தெரிந்தார்கள்

http://sinnakuddy.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: