உஷாராகும் பென்டகன்!: முள்ளை வைத்து முள்ளை எடுக்கும் அமெரிக்கா?

https://i1.wp.com/www.virakesari.lk/image_article/pentagon.jpgஅமெரிக்க இராணுவ உயர்பீடமான பென்டகன் முக்கிய பொறுப்பொன்றிற்காக ஆள் தேடும் பணியில் இறங்கியுள்ளது.

இணையம் ஊடான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைத் தடுக்கும் பொருட்டு ஹெக்கர்களை நியமிக்கவுள்ளது பென்டகன்.

இதற்கான நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளது. அமெரிக்க சைபர் பாதுகாப்பு பிரிவினை பலப்படுத்தும் தேவை எழுந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


 

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் நாடுகள்  பலவற்றின் இணையக் கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியாக ஊடுருவல்காரர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உலகநாடுகள் அதிக அக்கற்றை செலுத்த ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவும் இதே காரணத்தினைக் கருத்தில் கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொண்டுள்ளது.

ஹெக்கர்களின் ஊடுருவல் தாக்குதல்களை ஹெக்கர்களை வைத்தே முறியடிக்கும் திட்டத்தினை அமெரிக்க முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பலவற்றின் இணையத்தளங்களில் ஊடுருவிய ஹெக்கர்கள் சுமார் 1.6 மில்லியன் கணக்குகளின் தகவல்களை அண்மையில் ஹெக்கர்கள்  திருடியிருந்தனர்.

நாசா, எப்.பி.ஐ, பென்டகன், உட்பட பல அமைப்புகளின் இணையக்கட்டமைப்புகளின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இது தவிர அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நிறுவனங்களையும் ஹெக்கர்கள் விட்டுவைக்கவில்லை.

https://i0.wp.com/www.virakesari.lk/image_article/hackerdadad.jpg

‘Ghost Shell’ என்ற ஹெக்கர்களின் குழுவே இத்தாக்குதல்களை நடத்தியிருந்ததுடன். இத்திட்டத்திற்கு #ProjectWhiteFox என அக் குழு பெயரிட்டிருந்தது.

பாவனையாளர்களின் இணைய முகவரிகள், கடவுச் சொற்கள், கணக்கு விபரங்கள் என பல விபரங்கள் அக்குழுவினால் திருடப்பட்டிருந்தன.

இதன்மூலம் அமெரிக்காவின் முக்கிய அமைப்புகளின் இணையக்கட்டமைப்புகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருந்தது.

இதேபோல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக் கணனிகள் ஹெக்செய்யப்பட்டுள்ளதாகத் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இதனை அப்போது மறுத்த வெள்ளைமாளிகை அதிகாரிகள் குறிப்பிட்டதொரு வலையமைப்பினைக் குறிவைத்தே ஹெக்கிங் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

தனிப்பட்ட நபராலோ அல்லது குழுவொன்றினாலோ மேற்கொள்ளப்படும் ஹெக்கிங் நடவடிக்கைகளுக்கு அப்பால் நாடொன்றினால் மற்றுமொரு நாட்டின்  மீது நடத்தப்படும் ஹெக்கிங் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.

https://i0.wp.com/www.virakesari.lk/image_article/anonymousas.jpg

இதற்கு ஈரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ஹெக்கிங் தாக்குதல்களையும், மத்தியகிழக்கில் உள்ள சில நாடுகளின் வங்கிகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்பட்ட தாக்குதல்களையும் குறிப்பிடமுடியும்.

அதாவது நாடொன்றின் அனுசரணையுடன் (state-sponsored hacking) இன்னொரு நாட்டின் மீதோ அல்லது தனிப்பட்ட நபர்களின் மின்னஞ்சல் கணக்கினை குறிவைத்தோ நடத்தப்படும் தாக்குதலாகும்.

பாம்பின் கால் பாம்பறியும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் போன்ற பழமொழிகளை அமெரிக்கா தற்போது புரிந்துகொண்டுள்ளதாக தெரிகின்றது.

 

thanks: virekesari

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: