முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

GO TO GOOGLE PAGE CLICK HERE

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இணையமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழிபெயர்ப்புச் செய்யும் கருவியை உருவாக்கி இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உடனடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிறமொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனால் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் அடிக்கும் சொல்லை அது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பந்தியாக இருக்கும் வசனங்களையும் அது மாற்றுகிறது.

அதாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ இல்லை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ இனி நாம் சுலபமாக மொழிபெயர்க்கலாம். ஆங்கில இணையம் ஒன்றில் நீங்கள் ஒரு செய்தியை வாசிக்கிறீர்கள், விளங்கவில்லை என்றால் அச் செய்தியை அப்படியே காப்பி பண்ணி கூகுள் மொழிபெயர்ப்பில் இட்டால் உடனடியாக அது அதனை தமிழுக்கு மாற்றிக் காட்டுகிறது. இருப்பினும் தற்போது கூகுள் இதனை ஒரு பரீட்சாத்தமகவே விட்டுள்ளது. பல லட்சம் தமிழர்கள் இதனைப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, சில ஆங்கிலச் சொற்களுக்கும், சில தமிழ் சொற்களுக்கு சரியான அர்த்தங்களை அவர்கள் எழுதுவார்கள். அதை திருத்தும் வசதிகளும் இருக்கிறது. திருத்தப்படும் வசனங்களும் சொற்களும் நாளடைவில் பெருகி ஒரு நேர்த்தியை அல்லது முழுமையைப் பெறும்.

திருத்தும் வசனங்களும் சொற்களும் சேமிக்கப்படுவதால், இன்னும் சில காலத்தில் கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு பூரணமன நிலைபெற்ற கருவியாக உருமாற உள்ளது. அதற்கு நீங்களும் உதவலாம். உதாரணமாக ஈழத் தமிழர்கள் பாவிக்கும் பல சொற்களுக்கு அங்கே அர்த்தம் கிடையாது. கூடுதலாக தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தாம் வழக்கமாகப் பாவிக்கும் சொற்களை இடுகைசெய்கின்றனர். எனவே பண்டைய தமிழ் மாறாது.. பிறமொழிக் கலப்புகள் இல்லாத ஈழத் தமிழர்கள் தமது சொற்களை இட்டு அதற்கான அர்த்தத்தை கூகுள் கருவியில் சேமிக்கவேண்டும் என அதிர்வு இணையம் வேண்டி நிற்கிறது. உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தாலும் கூகுளானது 63 மொழிகளையே பாவனையில் வைத்துள்ளது.

அதில் தமிழும் அடங்கும் என்பது பெருமைக்குரிய விடையமாகும். தமிழீழத்துக்காகப் போராடும் நாம்.. தமிழுக்காவும் போராடவேண்டும். எமது மொழிபோல உலகில் வேறு எந்த மொழியும் கிடையாது என்பதே உண்மையாகும் !

GO� TO GOOGLE PAGE CLICK HERE

Advertisements

One thought on “முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: