பகுதி 1

பொதுவான விதிகள்.

1.1 நிறங்கள்.

இதனை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஆனால் Photoshop பற்றி விரிவாக அறிய விரும்புபவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனையவர்கள் அடுத்த பகுதிக்குச் செல்லலாம்.

பொதுவாக நிறங்கள் இரண்டு விதமாக இயங்குகின்றன.
1 – Additive color {?}
2 – Subtractive color {?}

முதலாவது வகையானது சிவப்பு (RED), பச்சை (GREEN), நீலம் (BLUE) ஆகிய மூன்றையும் முதன்மை வண்ணங்களைக் கொண்டது. இம் மூன்றையும் சேர்க்கும்போது வெள்ளை நிறம் உண்டாகும். இவற்றில் இரண்டை அல்லது மூன்றையும் வித்தியாசமான விகிதத்தில் கலந்தால் ஏனைய எல்லா நிறங்களையும் உருவாக்கலாம். உதாரணமாக தொலைக்காட்சியைக் கொள்ளலாம். தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளி இல்லாதபோது கறுப்பாகவும் மூவண்ண ஒளிக்கதிர்களைச் சேர்க்கும்போது வெள்ளை நிறமும் உண்டாகும்.
Posted Image

Photoshop இல் ஒவ்வொரு முதன்மை வண்ணங்களையும் 0 தொடக்கம் 255 ஆகப் பிரித்து கீழ்கண்டவாறு பயன்படுத்தப் படுகிறது (ஏன் 256 பிரிவுகள் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்).
Posted Image

இரண்டாவது வகையானது இளநீலம் (CYAN), குங்குமம் (MAGENTA), மங்சள் (YELLOW) ஆகியவற்றை முதன்மை வண்ணங்களாகக் கொண்டது. இம் மூன்றையும் கலக்கும்போது கறுப்பு நிறம் உண்டாகும். உதாரணமாக அச்சு இயந்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் இம் மூன்று வண்ணங்களையும் கலந்தால் கறுப்பிற்குப் பதிலாக பழுப்பு நிறமே உண்டாகும். ஆகவே சரியான கறுப்பை உருவாக்குவதற்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் கறுப்பையும் நான்காவது வண்ணமாகச் சேர்த்துக் கொள்ளப் படுகிறது. இதற்கு உதாரணமாக அச்சு இயந்திரத்தைக் கொள்ளலாம். மூன்று விதமான சாயங்களை ஒன்றாகக் கலந்தால் பழுப்பு நிறம் உண்டாகும்.
Posted Image

Photoshop இல் இவை ஒவ்வொன்றையும் 0 தொடக்கம் 100 விகிதமாகப் பயன்படுத்தப் படுகிறது.
Posted Image

Photoshop இல் ஒரு படத்தை உருவாக்க வேண்டுமாயின் இவ் விரண்டு வகைகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் (வேறு சில வகைகள் இருந்தாலும் இவை இரண்டுமே பிரதானமாகப் பயன்படுத்தப் படுகின்றன). எந்த நோக்கத்திற்காக அப் படத்தை உருவாக்குகிறோம் என்பதைப் பொறுத்து இத் தெரிவு அமையும். உ+ம் ; அச்சுப்பதிவுகாக இருந்தால் இரண்டாவதைத் தெரிவு செய்யலாம். இணையத்தில் பாவிப்பதானால் முதலாவது தெரிவாக இருத்தல் வேண்டும். நாம் முதலாவதை மட்டுமே தற்போது எடுத்துக் கொள்வோம்.

இனி படம் ஒன்று எப்படித் திரையில் கொண்டு வரப்படுகிறது என்பதைப் பார்ப்போம். Photoshop படத்தை மூன்று முதன்மை வண்ணங்களையும் தனித்தனியாகப் பிரித்து தனித்தனியான தட்டுகளில் பதிந்து கொள்கிறது.
Posted Image
Posted Image

இவை மூன்றும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு திரையில் நேர்த்தியாக காட்டப்படுகிறத

தொடரும்.

One thought on “

Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: