கூகுள் குரோம் 6ல் உள்ள புதிய சிறப்பம்சங்கள்

இன்று இனிய உலாவிகளில் சிறந்த இடத்தை பிடித்துள்ள கூகுள் குரோம் தற்போது தன்னுடைய இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடியது. பிறந்த நாள் பரிசாக அனைவருக்கும் கூகுள் குரோம்6 என்ற புதிய பதிப்பை அனைவருக்கும் இலவசமாக அளித்தது. கூகுளில் தற்போது வெளியிட்டிருக்கும் பதிப்பில் நிறைய மாற்றங்களும் வசதிகளும் செய்து நமக்கு அளித்துள்ளது. அப்படி என்னதான் புதுசா இருக்கு என்று கேட்கறிங்களா கீழே தொடருங்கள்.

கூகுளின் தாரகமந்திரமே எளிமை,புதுமை,பாதுகாப்பு ஆகியவையே. இது தம் வாசகர்களின் திருப்தியை மனதில் கொண்டு உருவாக்கியதே இந்த உலாவி கூகுள் குரோம். இதிலும் பல மாற்றங்கள் செய்து வெளியிட்டு உள்ளது இந்த Google Chrome 6. கூகுள் குரோம் பொதுவாக தானாகவே அப்டேட் ஆகி கொள்ளும். அப்படி அப்டேட் ஆகாதவர்கள் இந்த தளத்தில் சென்று தரவிறக்கி http://www.google.com/chrome/ கொள்ளுங்கள்.
1. Speed :
கூகுள் குரோம் 6 பதிப்பு வேகம் வியக்க வைக்கும் அளவில் உள்ளது. ஒரு பக்கத்தை மற்ற பிரவுசர்களில் திறப்பதற்கும் கூகுள் குரோம் 6 ல் திறப்பதற்கும் வேகம் அதிகமாக உள்ளது.
2. Print Selection: 

ஒவ்வொரு இணையதளங்களில் பிரிண்ட் எடுக்கும் வசதி இருக்காது அப்படி நாம் பிரிண்ட் எடுத்தாலும் அந்த முழு பக்கமும் சேர்ந்து வரும். ஆனால் கூகுள் க்ரோமில் தற்போது Selection என்ற பட்டன் உள்ளது. அதில் நீங்கள் செலக்ட் செய்த பகுதியை மட்டும் பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
3. Auto fill Options:
இந்த வசதி மிகவும் வியப்பானது. நாம் இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டுமென்றால் அதற்கு அவர்கள் கொடுக்கும் உறப்பினர் படிவத்தை பூர்த்தி செய்தால் தான் உறுப்பினர் ஆக முடியும். இப்படி ஒவ்வொரு தளத்திலும் செய்து செய்து நமக்கே வெருப்பாகிவிடும். இதற்க்கு ஒரு மாற்று வராதா என்று நானே யோசித்தது  உண்டு. அந்த குறையை தீர்க்க வந்திருப்பதே இந்த Auto பில்

  • Settings – Options – Personal Stuff – Auto Fill Options – Add Address (or) Add Credit Card  – இங்கு சென்று உங்கள் விவரங்களை கொடுத்து Save செய்து விடவும்.
  • இனி நீங்கள் இணையத்தில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் ஒவ்வொரு முறையும் டைப் செய்ய வேண்டியதில்லை.  
  • இந்த Auto Fill Options தேர்வு செய்தால் போதும் அனைத்து கட்டங்களிலும் சரியாக உங்களுடைய விவரங்கள் வந்து விடும். 

4. Left Buttons:

இந்த சிறிய பட்டனில் கூட எளிமையை புகுத்தி உள்ளனர். அவசியமல்லாத அனைத்தையும் எடுத்து விட்டனர்.

Google Chrome 5

Google Chrome 6

5. Right Menu:
முன்பு கூகுள் குரோம் ஐந்தில் இருந்த இரண்டு மெனு பட்டங்களில் ஒன்ற எடுத்து விட்டனர். இந்த ஒரே மெனுவில் அனைத்து வசதிகளையும் அடக்கி உள்ளனர்.

Google Chrome 5

Google Chrome 6

6. PDF Viewer:

கூகுள் குரோம் டீபால்ட்டாகவே இந்த வசதியை கொண்டு உள்ளது. ஆனால் அதை Disable செய்து வைத்துள்ளது. அதை ஆக்டிவேட் செய்ய உங்கள் அட்ரெஸ் பாரில் chrome://plugins/ என்று டைப் செய்து வரும் விண்டோவில் Enable என்று கொடுத்து விடவும்.

7. Book Marks Bar:

   கூகுள் க்ரோமில் இதற்க்கு புதியதாக Short Cut Key கொடுத்துள்ளார்கள் Ctrl+Shift+B . அதான் மூலம் இதை மறைத்து கொள்ளலாம் தெரிய வைத்து கொள்ளலாம்.
8. Address Bar:
தங்களுடைய அட்ரஸ் பாரில் இனி http:// காணப்படாது இந்த கூகுள் குரோம் 6 ல்.
உதாரணமாக https://yarl.wordpress.com என்பது இனி yarl.wordpress.com என்றே நமக்கு தெரியும்.

thanksvandhemadharam.blogspo

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: