உங்கள் பிளாக்கின் பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவாக்க

உங்கள் பிளாக்கின் பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவாக்க

 

நாம் எழுதும் ஏதாவது ஒரு பதிவு ஏதோ பத்திரிகையிலோ அல்லது புத்தகத்திலோ வந்தால் எவ்வளவு சந்தோசப்படுவோம். நம்முடையை அனைத்து பதிவுகளையும் அப்படியே ஒன்றாக புத்தகமாக வெளியிட்டால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. நம் பதிவுகள் அனைத்தையும் எப்படி நாம் புத்தகமாக உருவாக்குவது என்றே இங்கு காணபோகிறோம்.
இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.பின்பு Dassboard- Settings – Site feed – Full- Save Settings –என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

 

இந்த சேவையை நமக்கு ஒரு வலைத்தளம் செய்கிறது. இந்த தளத்தில் நம் புத்தகத்தை உருவாக்கும் வரை இலவசமே. ஆனால் அதை டவுன் லோட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் தான் டவுன்லோட் செய்ய முடியும். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் க்ளிக் BLOG2PRINT செய்யவும்.

இந்த தளம் சென்ற உடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் இதில் உங்களுடைய பிளாக்கின் முகவரியை கொடுத்து Print My Blog என்ற அருகில் இருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுடைய பிளாக் ஸ்கேன் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.

 • Include Posts: இந்த இடத்தில் உங்களுக்கு எத்தனை பதிவுகள் புத்தகமாகக வேண்டுமோ அதனை செலக்ட் செய்து கொள்ளவவும். (ALL POSTS செலக்ட் செய்ய வேண்டாம் சில சமயம் சரியாக இயங்கவில்லை.)
 • Labels: இதில் உங்கள் பதிவுகளை நீங்கள் உங்கள் labels வகையில் வகை படுத்தலாம்.
 • Comments: நம் பதிவை படித்துவிட்டு வாசகர்கள் கூறும் கமென்ட் ஆக்டிவேட் செய்ய.
 • Page Template: இந்த இடத்தில் நீங்கள் Compact செலக்ட் செய்வதே சிறந்தது.
 • Order of Posts: உங்களின் பதிவுகள் வரிசை படுத்த.

அடுத்து COVERS என்ற பகுதி இருக்கும். இதில் உங்கள் புத்தகத்தின் அட்டை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

  அடுத்து உள்ள DEDICATION என்ற இடத்தில் உங்கள் புத்தகத்தின் ஏதேனும் முன்னுரையை கொடுத்து கீழே உள்ள CREATE MY BOOK என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் உங்கள் புத்தகம் தயாராகி கொண்டிருக்கிறது. சிறிது நேரம் காத்திருக்கவும். முடிவில் உங்கள் புத்தகம் தயாராகி வரும்.

  தேவைபட்டால் நீங்கள் அங்கே கொடுக்கபட்டிரும் விலை பட்டியலில் சொடுக்கி உங்கள் புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.

  thanks:vandhemadharam.blogspot.com

  Advertisements

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

  Connecting to %s

  WordPress.com.

  Up ↑

  %d bloggers like this: