பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க..

image

பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க..

 

தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல

இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்’ என்ற அறிவிப்பு வரும். உறுப்பினராகி விடுவோம் நாம். அவற்றிற்கும் பாஸ்வேர்டுகள் தேவை. சில தளங்களில் நுழைந்து சாப்ட்வேர்களை, டிரைவர்களை டவுன்லோடு செய்ய நினைப்போம். முதலில் உறுப்பினராகுங்கள் என அறிவிப்பு வரும். பாஸ்வேர்டு கொடுத்து அங்கும் உறுப்பினர்களாக மாறி விடுவோம்.
நமது கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களை மற்றவர்கள் படித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த பைல்களுக்கும் பாஸ்வேர்டுகளைக் கொடுப்போம். இப்படி கம்ப்யூட்டர் வாழ்க்கையில் நிறைய இடங்களில் பாஸ்வேர்டுகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. கொடுப்பது வரை சரி. ஆனால் இவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளதே. அங்கே தான் சிக்கலே எழுகிறது. பலர் எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஏன் என்று கேட்டால், ஒரு பாஸ்வேர்டை நினைவில் வைப்பது எளிது என்கிறார்கள்.
உண்மைதான். ஆனால் அந்த பாஸ்வேர்டை உங்களுக்குத் தெரிந்தவர் கண்டுபிடித்து விட்டால் அவ்வளவுதான். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட்டை, இமெயில் அக்கவுண்ட்டுகளை அவர் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார். உங்களது எல்லா ரகசிய பைல்களையும் அவர் திறந்து விடுவார். பாதுகாப்பு கருதி, பலர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பாஸ்வேர்டுகளை வைப்பார்கள். இதுதான் சிறந்த முறை. ஆனால் அவ்வளவு பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைப்பது கடினமான காரியம்.
அந்த பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பது முக்கியம். அவர்களுக்கு உதவிடும் பொருட்டு இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது. சில வழிகளை இங்கு காணலாம். எல்லாமே இலவசம்.
விண் ஜிப்: உங்களது லாகின் பெயர்களை பாஸ்வேர்டுகளை எல்லாம் ஒரு டெக்ஸ்ட் பைலில் டைப் செய்து அந்த டெக்ஸ்ட் பைலை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Win Zip (www.winzip.com) சாப்ட்வேர் கொண்டு என்கிரிப்ட் செய்யலாம். 256 பிட் AES என்கிரிப்ஷனை விண்ஜிப்பில் பயன்படுத்த முடியும். இந்த டெக்ஸ்ட் பைலை பிளாப்பியிலோ அல்லது யுஎஸ்பி பென் டிரைவிலோ ((Pen drive) ) சேமியுங்கள். வெளியில் செல்லும் போதெல்லாம் பிளாப்பியை அல்லது யுஎஸ்பி பென் டிரைவை கையில் எடுத்துச் செல்லுங்கள்.
பைல் 2 பைல்: www. cryplomathic.com/file2file/ தளத்தில் நுழைந்து File2File என்ற இலவச என்கிரிப்ஷன் டூலைப் பயன்படுத்தி எல்லா பாஸ்வேர்ட் விவரங்கள் அடங்கிய டெக்ஸ்ட் பைலை என்கிரிப்ஷன் செய்யுங்கள். 128 பிட் AES என்கிரிப்ஷனை நீங்கள் பயன்படுத்த முடியும்.
விண்டோஸின் என்டிஎப்எஸ்: விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி ஆகியவற்றில் NTFS பைல் சிஸ்டம் உண்டு. ஹார்ட் டிஸ்க்கின் ஒரு பார்ட்டிஷனை என்டிஎப்எஸ்ஸாக மாற்றி அங்கு ஒரு என்கிரிப்டட் போல்டரை உருவாக்கி விடுங்கள். பாஸ்வேர்ட் விவரங்கள் கொண்ட டெக்ஸ்ட் பைலை அந்த போல்டரில் போட்டு விடுங்கள்.
வேர்ட் அல்லது எக்செல் பைல்: லாகின் பெயர்களையும், அவற்றிற்கான பாஸ்வேர்டுகளையும் ஒரு எக்செல் பைலில் அல்லது வேர்ட் பைலில் டைப் செய்யுங்கள். இனிமேல் இவற்றை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டாம். ஆனால் இந்த எக்செல் பைலை அல்லது வேர்ட் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து சேமியுங்கள். இந்த பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வையுங்கள். வேறு அக்கவுண்டிற்கான லாகின் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் தேவைப்பட்டால், பாஸ்வேர்ட் கொடுத்து இந்த எக்செல் அல்லது வேர்ட் பைலைத் திறந்து தெரிந்து கொள்ளுங்கள்.
விஸ்பர் 32 : http://www.ivory.org தளத்தில் இருந்து Whisper32 என்ற இலவச சாப்ட்வேரை டவுன்லோடு செய்யுங்கள். இதில் உங்களது எல்லா பாஸ்வேர்டுகளையும் போட்டு வையுங்கள். என்கிரிப்ஷன் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ்வேர்ட் சேப்: லாகின் பெயர்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை போட்டு வைக்க Password safe v1.7 என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம். ஆபீஸ் மற்றும் சொந்த அக்கவுண்டுகளின் விவரங்களை வெவ்வேறு டேட்டாபேஸில் போட முடியும் என்பது இதன் சிறப்பு. இதைப் பெற http://passwordsafe.sourceforge.net தளத்தில் நுழையுங்கள்.
பாஸ்வேர்ட் கார்டியன்: இலவச சிறிய புரோகிரமான Password Guardian சாப்ட்வேரைப் பெற http://www.cryplocentral.com/html/passgrd.html என்ற தளத்தில் நுழையுங்கள். இந்த சாப்ட்வேரை நிறுவாமலே பயன்படுத்த முடியும். பிளாப்பியிலே இந்த சாப்ட்வேரையும், பாஸ்வேர்ட் பைலையும் பதித்து விடலாம்.
ப்ரீ பாஸ்வேர்ட் கீப்பர் : Free Password Keeper என்ற இந்த சாப்ட்வேரை (http://swiss.torry.net/apps/utilities/security/freepass.zip) டவுன்லோடு செய்து, அதை அண்ஜிப் செய்து, exe பைலை இயக்குங்கள். பாஸ்வேர்ட் விவரங்களை அது என்கிரிப்ட் செய்து காக்கும் ஆற்றல் கொண்டது. இந்த விவரங்களைப் பார்வையிட பாஸ்வேர்ட் தேவைப்படும். இமெயில் முகவரிகள், வெப் தளங்களின் முகவரிகள் போன்வற்றையும் இது காக்கும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத பல இலவச பாஸ்வேர்ட் பாதுகாப்பு சாப்ட்வேர்கள் உள்ளன. எதையாவது ஒன்றைப் பயன்படுத்தி பாஸ்வேர்டுகளை ரகசியமாக பாதுகாத்து வையுங்கள்.
thanks to sathiyamaarkkam.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: