இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு!

www.tamil.com.nu வில்

ரகுவீரனின் அனுமட்தியுடன்.

நன்றி

clip_image002[4] இலங்கையின் வரலாறு பற்றி எனது இத் தொடரின் முற்பகுதியில் சில இடங்களில் கூறியிருந்தேன். அதனை இத் தொடரை முழுமையாக படித்து வந்தால் அறிய முடியும். இலங்கைத் தமிழரின் மறைக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட உண்மையான வரலாற்றினை கூறவேண்டும் என்பது எனது நெடுநாள் அவா ஆகும்.

இத்தொடரில் நாகரும் (தமிழர்), இயக்கரும் (இராவணன் வழிவந்த அரக்கர் இனம்) இலங்கையில் வாழ்ந்து வந்ததாக கூறியிருந்தேன். அக்கால கட்டத்தில் (இற்றைக்கு 5500 ஆண்டுகளிற்கு முன்) துவாபர யுகத்தின் முடிவில் பெரும் கடல் அணர்த்தம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தேன்.

 

 

இந்தக் கடல் அணர்த்தத்தில் இலங்கையில் தமிழருடைய பெரும் பட்டிணங்கள் அழிக்கப்பட்டன. சில பகுதிகள் இன்றும் கடலினுள் மூழ்கியுள்ளன. இதில் யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதி கடல் நீர் மூடி பின் நோக்கிச் சென்ற போது வெளிப்பட்டன. இதற்கு முன்பு யாழ்ப்பாணம் மிகவும் சிறப்பான பட்டணமாக விளங்கியது. இவ்வாறே மன்னாரும் மகாதீர்த்தம் என்னும் பெயருடன் ஒரு பெரும் துறைமுகப் பட்டணமாக விளங்கியது. மற்றைய தமிழ் பட்டணங்களான மதுரை, பூம்புகார் போன்றவற்றுடன் வணிகத் தொடர்புடனும் தெய்வீக

யாத்திரைகளுடனும் சிறப்பாக விளங்கியது. அந்த கடல் அணர்த்தத்தின் பின்பு யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதி ஒரு மணற்திடராக மாறியது.
இது இவ்வாறு இருக்க, இலங்கையை சில வேளைகளில் சேர, சோழ, பாண்டியர்களும் போர் தொடுத்து கைப்பற்றி ஆட்சி செய்தும் வந்தனர். இக்கால கட்டத்தில் இற்றைக்கு 2400 ஆண்டுகளிற்கு முன் இந்தியாவின் மேற்கு வங்கத்தின் சைவ அரசனால் நாட்டை விட்டு துரத்திவிடப்பட்ட பௌத்தர்கள் படகுகளில் ஏறி அகதிகளாக வேறு இடம் நோக்கிச் சென்றனர்.

clip_image003[5]

இவர்கள் தமிழ்நாட்டில் இறங்க முற்பட்ட போது அங்கும் துரத்தப்பட்டனர். இலங்கையின் வட பகுதியிலும் அதே நிலமையிருந்தமையால் அவர்கள் இலங்கையின் தென்பகுதியில் பெரும் காடுகளாயும், இயக்கர்களின் வாழ்விடமாகவும் விளங்கிய அன்றைய கதிரமலை என்னும் (அம்பாந்தோட்டை, கதிர்காமம், யாலை பகுதியாகும்) அம்பாந்தோட்டையில் வந்து தரையிறங்கினார்கள்.

இங்கு தமது குடிகளை அமைத்துக் கொண்ட இந்த பௌத்த அகதிகள், தாம் வந்து இறங்கிய இடத்தில் இலங்கையின் முதல் பௌத்தமத விகாரையான விகாரமாதேவி விகாரையையும் அமைத்துக் கொண்டனர். ஆனால் மகாவம்சத்தில் இதற்கு வேறு கற்பனைக் கதைகளை பௌத்தர்கள் ஐந்நூறு வருடங்களின் பின் புணைந்து கொண்டார்கள்.

அன்று இவர்கள் காட்டுப் பகுதியில் குடியேறியமையால் தமிழர்கள் பெரிதாக ஒன்றும் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் அதுவே இன்று தமிழர்களை அகதி நிலைக்கு உள்ளாக்கியது என்பதே உண்மை. அங்கு குடும்பமாகவே வந்திறங்கிய பௌத்தர்கள் அப்பகுதியில் ஏற்கனவே வாழ்ந்து வந்த இயக்கர்களுடனும் கலப்புத் திருமணங்கள் செய்து வாழ்ந்து வந்தனர்.

பௌத்தர்கள் மீன்பிடி, வேட்டை மற்றும் கூலித்தொழிலே செய்து வந்தனர். பின் அவர்களின தொழில் காரணமாக தமிழர் பகுதிகளிற்கும் செல்லவும், குடிபெயரவும் செய்தனர். இதுவே சிங்களவர் கூறும் விசயனின் வருகை ஆகும். உண்மையில் சிங்கள வரலாற்று மகாவம்சம் என்னும் நூலில் விசயன் என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரமே! அத்துடன் இவர்கள் பேசியது சிங்களமல்ல வங்கமொழியே ஆகும். அந்நாளில் சிங்களம் தோன்றவில்லை என்பதே உண்மை.

இக்கால கட்டங்களில் தேவநம்பிய தீசனின் தந்தையாகிய முத்துசிவன் என்னும் தமிழ் சைவ அரசனின் முன்னோர்களே இலங்கையை அநுராதபுரத்தில் இருந்து ஆண்டு வந்தனர். இதில் முத்துசிவன் இலங்கையை இற்றைக்கு இரண்டாயிரத்து முன்னூற்று பன்னிரண்டு (2312) ஆண்டுகளிற்கு முன்னிருந்து இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்திரண்டு (2252) ஆண்டுவரை ஆட்சி செய்து வந்தார். அதன் பின் முத்துசிவன் மரணமடையவே இற்றைக்கு இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்திரண்டு (2252) ஆண்டளவில் முத்துசிவனின் மகன் தீசன் ஆட்சிப் பீடம் ஏறினான். இவனே இலங்கையில் சைவ சமயத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறிய முதல் தமிழ் மன்னன் ஆவான். இவன் காலத்தில்…
தொடரும்…

நன்றி

-ரகுவீரன்-

http://www.unarvukal.com/index.php?showtopic=12135

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: