வெளிவந்துவிட்டது: Vista Service Pack 2

வெளிவந்துவிட்டது: Vista Service Pack 2

clip_image002

Microsoft நிறுவணம் தனது தயாரிப்பான Windows Vista

இயங்குதளத்துக்கான Service Pack 2 வெளியிட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன் தயாரித்து முடிக்கப்பட்ட இந்த

SP2 தற்போது அனைவருடைய பாவணைக்காகவும் தறவிறக்கம் செய்ய தாயாராக வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

இரண்டவது Service Pack முதலாவது போன்றே இதுவரை வெளியான Hotfixes மற்றும் Security Updates களின் ஒட்டுமொத்த பொதியாக உள்ளது. தற்சமயம் கண்டரியப்பட்ட முக்கிய பிரச்சனைகளை ஒரங்கட்டும் வகையில் 70 Updates உள்ளடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மேலும் 700 அம்சங்களில் முன்னேறம் செய்யப்பட்டுள்ளது.

 

அதோடு கூட புதிய வன்பொருட்களையும் (Hardware) Technik-Standards அனுசரிக்கிறது. Bluetooth 2.1 க்கான மேம்பாடுகளை Windows Vista Feature Pack for Wireless என்னும் மாற்றம் கொண்டுவந்துள்ளது. Windows Connect Now (WCN) இது WLAN யை மேம்படுதியுள்ளது. விண்டோஸ் தூக்கம்(Stand-by) கொண்டு எழுந்த்தும் WLAN உடனடியாக இயங்கத்தொடங்கும்.

 

விண்டோஸை ஆரம்பிக்கும் நேரம் குறைக்கப்படுள்ளது போன்ற ஒரு மாயை தோற்றம் தெரிகிறது. தற்போது கணினி மேசை (DESKTOP) சிலவிணாடிகள் சென்றபின்னே தென்படுகிறது. SP2 பின் கணினி மேசை (DESKTOP) வெகு முன்னரே தென்படுவதால் அவ்வாறு இருக்கும். இருந்த போதிலும், Boot நேரத்தில் இது எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.

 

SP2 நிறுவிய பின் 64-Bit-Prozessor அனுசரிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி Blu-ray-Medien எரிக்கவும் முடிகிறது. Vista-Sidebar என்னும் துனை பயண்பாடு RSS சேவைகளை வேகப்படுத்தியுள்ளது.

 

Internet Explorer, SilverLight, DirectX11 போன்றவற்றை தனியாகவே தறவிறக்கம் செய்யவேண்டும். இது இந்த பொதிக்குள் உள்ளடக்கப்படவில்லை. Windows 7 வெளிவரும்போதே இவை உள்ளடக்கப்பட்ட பொதியாக வரவுள்ளது.

இந்த Service Pack -ன் அளவு 300 MByte Standalone-Paket.

 

ஒரு சில நாடகளுக்கு முன்பு Service Pack 3 க்கான வேளைகள் அரம்பித்துவிட்டதாக அவ் நிறுவணம் அறியத்தந்தது.

 

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: