பெண்களுக்கென ஸ்டைலான மொபைல்

lg_sh490_1எல்.ஜி. நிறுவனம் பெண்களுக்கென ஸ்டைலான தோற்றத்தில் மொபைல் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்.எச். 490 என்ற எண்ணுடன் வெளியாகி உள்ள இந்த போன் ஒரு கிளாம் ஷெல் போன். இதனை மேக் அப் போன் என்றும் அழைக்கலாம். இதன் வெளிப்புறம் சிகப்பு, ஊதா, வெள்ளை ஆகிய வண்ணங்களில் பளபள என ஸ்டைலாக உள்ளது. உள்புறமாக 2.4 அங்குல திரையும் வெளியாக 1.1 அங்குல திரையும் உள்ளது. 3 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா தரப்பட்டுள்ளது. மேலும் ப்ளு டூத், வீடியோ மற்றும் ஆடியோவிற்கான மீடியா பிளேயர், 512 எம்பி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைக்க போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் விலை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெண்களுக்கென ஸ்டைலான மொபைல்

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: