ரகசியமாக கண்காணிக்க வேண்டுமா?

getittamil wireless camஇப்போது நீங்கள் யாரையாவது ரகசியமாக

அவருக்கு தெரியாமல் அவருடை நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா?

இதோ வந்துவிட்டது ஒயர்லெஸ் வீடியோ கேமரா. இதன் மூலம் நீங்கள் எங்கிருந்தபடியும் கண்காணிக்கலாம்.

தேவைப்பட்ட இடத்தில் பசை போட்டு, இந்த கேமராவை ஒட்டி விட்டால் மட்டுமே போதுமானது.

 

நெட்வொர்க் வசதி மூலம், எங்கிருந்தும் வீடியோவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முடியும். நவேடாவில் உள்ள லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், இந்த நவீன வீடியோ கேமரா காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த கேமராவைப் பயன்படுத்துவோர், எங்கிருந்தபடியும், தங்கள் குடும்பத்தில்,

நிறுவனத்தில் நடப்பவற்றை கண்காணிக்க முடியும். தற்போது, சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு வரும் இந்த கேமரா, இன்னும் ஆறு மாதத்தில் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த கேமராவின் தொழில் நுட்ப முறை, ‘அவாக்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கேமரா மிகவும் சிறிய வடிவிலானது; பேட்டரியில் செயல்படக் கூடியது.

ஒயர்லெஸ் வீடியோ கேமராவாகவும், புகைப்படக் கருவியாகவும் இதை பயன்படுத்தலாம். இதை சுவர்களிலோ, வேறு இடங்களிலோ பசை போட்டு ஒட்டி வைத்து விட்டால் போதுமானது.

இணைய தளத்தின் அடிப்படையில், இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க முடியும். இதை தினமும், 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சம். இதை பொருத்துவது மிக மிக எளிதானது. இதை பொருத்துவதற்கு ஒயர்கள் தேவையில்லை; புதிதாக சாப்ட்வேர் இணைக்கத் தேவையில்லை.

 

 

 

 

தகவள்: getitamil.com

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: