Posted in Windows

டிஸ்லெக்ஸியா பற்றிய உண்மைகள்

clip_image001

டிஸ்லெக்ஸியா பற்றிய உண்மைகள்

முதலில் இது ஒரு மனநோய் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

டிஸ்லெக்ஸியா என்றால் என்ன?

,, டிஸ்லெக்ஸியா,, என்ற வார்த்தை கிரேக்க மொழொயிலிருந்து வருகிறது. இதன் அர்த்தம் ,, தெளிவற்ற பேச்சு,, இந்தக் கோளாறு வாழ்நாள் முழ்ய்க்க இருக்கும். டிஸ்லெக்ஸியா என்பது மொழியோடு சம்பந்தப்பட்ட கோளாறைக் குறிக்கிறது. முக்கியமாக இந்தக் கோளாறு உள்ளவர்கள் வாசிக்க கஸ்டப்படுவார்கள். இப்படிப்பட்ட ஆட்கள், எழுத்துக்களையும் அதற்க்குறிய உச்சரிப்புக்களையும் சம்பந்த்தப்படுத்தி பார்க்க சிரமப்படுவார்கள். குரிப்பிட்ட சில அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம்.

டிஸ்லெக்ஸியா எதனால ஏற்படுகிறது? இதற்க்கான் காரணம் இன்னும் தெரியவில்லை. என்றாலும், பரம்பரை இதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூளையின் வளர்ச்சியும் செயல்ப்பாடும் மாறுப்பட்டிருப்பது இதற்க்கு ஒரு காரணமாக இருந்தாலும் இது ஒரு அறிவுத்திறனையோ கற்கும் ஆர்வத்தையோ பாதிப்பதில்லை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சொல்லப்போனால், மொழியோடு சம்பந்தப்படாத விஷயங்களில் இவர்கள் பெரும்பாலும் படு திறமைசாலிகளாக இருக்கிரார்கள்.

டிஸ்லெக்ஸியாவுக்கு என்ன சிகிச்சை? இந்தக் கோளாறை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடுவது இன்றியாமையாதது. முக்கியமாக கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற பல்வேறு புலன்களை பயண்படுத்தி மொழியை கற்றுக்கொள்ள அவர்களுக்கு சிறப்பு பயிற்ச்சி கொடுக்கலாம். இந்த மாணவர்கள் பலருக்கு தனிக்கவனம் தேவைப்படுகிறது. அப்போதுதான அவர்களுடைய புரிந்துகொள்ளும் சக்த்திக்கு ஏற்ப அவர்களால் கற்றுகொள்ள முடியும். பள்ளியில் வருகிற பிரச்சனைகள் அவர்களுடைய மனதை பாதிக்கலாம், அதை சமாளிக்க அவர்களுக்கு உதவிதேவைப்பட்லாம். கடின முயற்சியெடுத்து, தனிப்பட்ட விதமாகச் சொல்லிக்கொடுக்கும்போது, இந்த மாணவர்கள் நன்கு வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வார்கள்.

பொது(general)அறிகுறிகள்
•பார்க்க நல்ல புத்திசாலிபோலவும், நல்ல ஆற்றொழுக்கு பேச்சும் உடையவராக இருக்க கூடும். ஆனால் அவரின் வகுப்பு மாணவர்களை போல எழுத படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.
•சோம்பேறி என்றோ, இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் உன்னால் முடியும் ஆனால் நீ உழைப்பதிலை என்று சொல்லும் வண்ணம் இருப்பார்கள்.
•சில சமயம் நல்ல பொது ஞானம், அ றிவு உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்த தேர்வும் நன்றாக எழுத மாட்டார்கள். ஆனால் அதே சமயம் கேள்விகள் கேட்டால் நன்றாக பதில் சொல்வர்கள்.
•முட்டாளை போல தோற்றமும். தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும், தனியே இருப்பதை விரும்புவராகவும் இருப்பார்கள்
•நல்ல தொழில் திறமை கொண்டிருப்பார்கள். பாடுவது, ஓவிய வரைவது போன்ற கலைகளில் அல்லது நல்ல கருவிகளில் (Mechanics) தேர்ச்சி உடையவராக இருப்பார்கள்.
•பகற்கனவு காண்பவராக இருக்க கூடும்
•நல்ல படங்களுடன் கூடிய பாடங்கள், தானாகவே செய்யும் சோதனைகள் மூலம் கற்றல் இவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் சிந்தனை படங்களையும் பார்க்க கூடிய விளக்கங்களாலும் மேலும் நுணுக்கம் பெறுகிறது.

பார்வை, படித்தல், மற்றும் எழுத்துப்பிழைகள்:
•படிக்கும் போது தலை வலிப்பதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்வார்கள்.
•எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றில் பல குழப்பங்கள் இருக்கும்
•திரும்ப திரும்ப வரும் சொற்களில் குழப்பம், மாறிவரும் எழுத்துக்களின் தடுமாற்றம், எழுத்துக்களை மாற்றி படித்தல் இவை சாதாரண நிகழ்வுகள்.
•கண்களில் குறை இருப்பதாக சொல்வார்கள். ஆனால் கண்களிலோ பார்வையில் ஒரு குறையும் இருக்காது
கேட்டல், பேசுதல்:
அதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்க கூடியதாக உணர்வார்கள். அதிக மன அழுத்தம் இருப்பின் தவறுகள் அதிகம் செய்வார்கள். மேலும் முழுமையான வாக்கியங்கள் அமைக்க மிகவும் கஷ்டப்படுவார்கள்.

ஆசிரியர்: