Web ஒரு மேகம்

clip_image001

நாம் பயண்படுத்தும் கணனிகள் எல்லாம் கடந்தகாலம் ஆகிவிடும். இணையத்தளத்திலே அடுத்த கணனியின் தலைமுறை புரச்சியாகிறது. Cloud Computing என்பதுதான் எதிர்காலம். ஏற்கனவே இருக்கும் தொழிள் நுட்ப்பத்தை பயண்படித்தி புதிய வழிகளை இந்தப் புரட்சி உருவாக்குவதால் இது நிச்சயம் வெற்றி பெரும் என்று எதிர்ப்பாக்கப்டுகிறது.

பழைய கணனியில் HD-Videos திருத்துவது, கையடக்கதொலைபேசி 500GB capacity, மென்பொருளையும் சொந்த தகவளையும் எந்த கணனியிலிருந்தும் பார்கக்க கூடிய வசதியை இந்த Cloud Computing தொழில்நுட்ப்பம் சாத்தியப் படுத்துகிறது. இவையனைத்துமே வேகமான இணையத்தள இனைப்பின் உதவியுடனும், Browser உதவியுடனும் முடியும். இந்த வார்தையின் பின்னால் மறைந்திருப்பது என்ன? இது அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறது. Cloud Computing என்பது மறைந்து போகுமா அல்லது எதிர்காலத்தை ஆட்டிபடைக்குமா என்பதை விளக்கப்படுத்த விரும்புகிறேன்.

Hardware பற்றி கவளை வேண்டாம். மென்பொருள் எந்த Browser-லும் இயங்கும்.

Cloud Computing இதன் நோக்கம் என்னவென்றால், சிறிய மென்பொருளில் இருந்து கடினமான இயங்குதலம்(operatingssystem) வரைக்கும் Web-ல் இயக்குவது. பவணையாளர் அதிக விளை கொடுத்து Hardwarw எதுவும் வாங்கத்தேவையில்லை, தன்னுடைய இயங்குதளத்தை புதிப்பிபது பற்றீ கவளை வேண்டாம், புதிய மென்பொருட்களும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதெல்லாம் எப்ப நடக்கபோகுது? இப்பவே நடைமுறையில் இருப்பதை கூகள் நிறுபித்திருக்கிறது.

Office-tools, E-mail மின் அஞ்சல், RSS reader, calender மேலும் இன்னும் அதிகம் Web இணையத்தளத்திலே பயண்ப்டுத்தப்படுகிறது. எல்லா தகவலுமே கூகள் Server-ல் இருக்கிறது தேவைப்படும் போது எடுக்கப்படுகிறது.

மிகப்பெரிய நிறுவணங்களிண் microsoft, Google, Amazon or IBM Serverpacks உதவியுடன் இது சாத்தியமாகும் .இந்த இயந்திரங்கள் அதிக ஆற்றல் வாய்ந்தவை. பாவிக்ககூடிய ஆற்றலைக்காட்டிலும் அதிக ஆற்றாலை உருவாக்கிறது. வெட்டியக நிற்க்கும் போது தேவையில்லா சிலவை ஏற்படுத்துகிறது. தங்களுடைய இயந்திரத்தின் (கணனியின்) ஆற்றலை நன்கு பயண்படுத்டுவதற்க்காக அதன் ஆற்றலை தனி நபர்களுடைய மற்றும் பலவேறுபட்ட நிறுவணங்களின் தேவைக்கும் அனுபதிக்கிறது. இருவருக்குமே பயனுள்ள வியாபரம். வடிக்கையாளர் Programm lizens or Server க்கு பணம் செலவளிக்க தேவையில்லை, மாறாக தான் பவிக்கும் ஆற்றலுக்கு மட்டுமே பணம் செலுத்துகிறார். அதிக பிசியாக கணனனி இருக்கும் சமயத்தில் வேகமாக வேளை செய்வத்ற்க்கு கூடுதல் ஆற்றலை வாங்க முடியும்.

இதன் அடிப்படை தத்துவம்: ஒன்றாக செயல் படுவதன் மூலம் அதிக ஆற்றல்.

இந்த Cloud Computing ஒன்றும் புதிய கண்டு பிடிப்பு அல்ல. மாறாக ஏற்கனவே இருக்கும் தொழில் நுற்பத்தை ஒன்றினைக்கும் செய்ல்பாடு. இது தேவைபடுத்துவவை, computercluster, Grid computing and Utility Computing.

Cluster பல கணனிகள் ஒன்றினைக்கப்பட்டிருப்பதினால் (Network) இதன் ஆற்றல் அதிகரிக்கப்படுத்தப்படுகிறதி.(High Perfomance Computing). அதுமட்டுமல்ல தகவல்கள் (Datei) பாதகமாக பாதிக்கப்படுவதையும் குறைத்துகொள்ளாலம், ஒரு Server பலுதட்டையும் போது தன்னுடைய வேளையை மற்ற Server கடத்தி விடுகிறது. ( High Availability Cluster) cluster என்பது Serverparks serverfarmen என்றும் அழைக்கப்படுகிறது.

Grid அதிக ஆற்றல் தேவைப்படும் வேளையை நிறைவேற்ற பெரும்பாலும் பயண் படுத்தப் படுகிறது. Cluster-ல் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது? பல்லவேறுபட்ட வித்தியாசமான தன்ன தனியான Server-உடன் உலகமுலுவது உள்ள பல்வேறு பட்ட சேவர்கள் தங்களை இணைத்து கொள்ளலாம்.

மூன்றாவதாக தேவைப்படுவது Cloud Computing இயங்குவதற்க்கு Utility Computing. இங்கு வியாபர நிருபணங்கள் வாடிக்கையாளருக்கு தேவையான ஆற்றலை உதாரணமாக Online Capaciti, virtuel server மென்பொருள் பொன்றவRai சேவையாக வழங்கி வடிக்கையாளர் பயண்படுத்தும் அற்றலுக்கு அலவுக்குத்தக்கதான பணத்தை பெற்றுக்கொள்கிரது.

இது எல்லாருக்கும் பயணுள்ள சேவை. வடிக்கையாலர் Hardware விலை கொடுத்து வாங்கத்தேவையில்லை server உறிமையாளர் ஆற்றலை வாடைக்கு விடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கிறான்.

myNewBanner_1

பவணம்

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: