முகத்தில் பருக்கள்

           p67[1]   முகப்பரு ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வரும். அனால் இது இளம் பருவத்தினருக்குத்தான் அதிகமாக வருகின்றது. எண்ணெய் சுரப்பி அதிகமாக சுரப்ப்தினால் முகப்பரு ஏற்படிகிறது. கூடுதலாக சுரக்கும் எண்ணெய் மயிர்க்கால் வழியாக வெளியேறூம் போது வெளிப்பட்முடியாமல் தடைப்படும் சமயத்தில் முகப்பருவாக உருப்பெறுகிறது. இதனை நகத்தால் கிள்ளினாலோ, அல்லது தூசி பிடித்த துணியால் துடைத்தாலோ இவ்விடங்களில் தொற்றுநோய் ஏற்பட்டு முகப்பருவில் கட்டிகள் தோன்றுகின்றன. இந்த எண்ணெய் சுரப்பிகளை ” சீபெஷஸ் கிளாண்ட்ஸ்” என்று அழைக்கப்படுகிறது. இந்த எண்ணெய்சுரப்பியினால் தோல் அழகு பெறுகிறது.

     

          முகப்பரு முகத்தில் மட்டுமல்லாது கழுத்து, முதுகு, நெஞ்சு, தோட்ப்டை போன்ற இடங்களிலும் வரும். ஆபிரிக்க இணத்தவருக்கு முதுகில் இப்பருக்கல் கூடுதலாக வருகின்றன. இப்பருக்கள் மாறி மாறித் தோன்றி வருவதால் இவ்விடங்களில் கறுப்புத்தழும்புகள் காணப்படும்.

 

 

முகப்பருவில் நான்கு விதங்கள் உண்டு.

1. ஆரம்ப நிலையில் சிறிதளவு பருக்கள் காணப்படுதல்.

2. முகப்பருவில் சீழ்படித்த கட்டி போன்ற நிலை

3.முகப்பரு கடினமாதல்

4. முகப்பரு எல்லா இடமும் பரவித்தழும்பு காணப்படும் நில்லை.

 

முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

 

1. முகத்தைத் தினமும் மூன்று முதல் நான்கு முறை கழுவுதல் வேண்டும். ஜரோபிய நாடுகள், கனடா, அமெரிக்கா போன்ற குளிர் நாடுகளி வசிப்பவர்கள் இளஞ்சூட்டு நீரில் முகம் கழுவுதல் வேண்டும்.

2. வேறுபட்ட சவுக்காரங்களை மாறி மாறி பவிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒவ்வறு விதமான சவக்காரமும் மாறுபட்ட இராசாயணங்களை கொண்டுள்ளது. முக்ச்சேர்வைகளையும் தேர்வு செய்து நல்ல தரமானவற்றை பயண்படுத்த வேண்டும். பொதுவாக இயற்கை மூலிகை கலந்தவை சிறந்த்தது.

3. முகப்பவுடர், அழகுசாதன[ பொருட்கள், தைலங்கள், பூச்சுக்கள் என்பவற்றை அளவோடு பாவிக்க வேண்டும். அடிக்கடி அழகு சாதனங்களால் அழகுப்படுத்த விரும்பினால், தோல் காந்து வறட்ச்சி ஏற்படும்.

4. எண்ணெய் வகைகள், கொழுப்பு, இனிப்பு, உணவுகள், காரம் உணவுகள் தவிர்க்க வேண்டும்.

5. பென்கள் மாதவிடாய்க்காலத்தை வைத்திருக்க வேண்டும்

6. காற்றோட்டமான இடத்தில் தேகப்பயிற்சி செய்யவேண்டும்.

Advertisements