வலியே சுவை

உனக்காய்
பூ பறிக்கையில்
விரலில் தைத்த முள்ளை
விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன்.

தீயை முத்தமிட்டு
சிதறிச் சிரிக்கும்
மத்தாப்பு போல

முள்ளின் முனையில்
முளைக்கும் வலியில்
உன்னைப்பற்றிய
நினைவுகள் பூச்சொரிகின்றன.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: