கொஞ்ச நேரம் கொஞ்சுவோம்

imageமுத்தமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது?

தான் ஆசை வைத்திருப்பவருடன் அன்பான முத்ததைப் பகிர்ந்து கொள்வதில் அலாதி இன்பம் இருக்கின்ரது.  ஜரோப்பிய கலாச்சாரத்தில், தெருக்கள், பகிரங்க இடங்கள் என்று எந்த இடமாக இருந்தாலும், ஆசைக் காதலியை கட்டித் தழுவி, முத்தங்களை ஆண்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஆனால் ந்ம் கதையோ வேறு. இதெல்லாம் நாலுசுவருக்குள் அடங்கி விடும் சமாச்சாரமாக இது இருந்து வருகின்றது.

 

சரி, ஒரு சின்னக் கேள்வி. சராசைரியாக ஒருவர் எவ்வள்வு நேரத்தை முத்தங்கள்பரிமாற தன் வாழ்நாளில் செலவிடுகின்றார்?

20,160 நிமிடங்கள் என்கிறது ஓரு இணையப் பக்கம். இது என்ன கணக்கோ தெரியவில்லை. 24 மணி நேரமும் கொஞ்சிக் கொண்டு திரிகின்றன பல இளம் ஜோடிகள்.  இந்தக் கணக்கைச் சொன்னார்ல், இந்த இளம் ஜோடிகள் விழுந்து விழுந்து சிரிக்கக் கூடும்.

 

சரி அது போகட்டும்.

புராதன எகிப்தியர்கள், முனெனொரு காலத்தில் எப்படி ஆளுக்கு ஆள்  முத்தமிட்டுக் கொண்டார்கள்?

இதென்ன கேள்வி என்று  சிரிக்கிறீர்களா

தமது மூக்குகளை ஒன்றோடு ஒன்று உரசித்தான் இவர்கள் முத்தங்களை பரிமாறி இருக்கினறார்கள். இனியும் சிரிக்கிறீர்களா?

முத்தமிடுவது ஆரோக்கியமானது என்று ஒருவர் கூறினால் ஏற்பீர்களா? அப்படிச் சொல்லுவதில் தவறில்லைப் போல் தெரிகின்றது. முத்தமிடுவது எமது பல் முரசின் தேய்மானத்தை தடுத்து ரிறுத்துகின்றதாம்.

அது எப்படி?

முத்தாமிடும் போது மேலதிகமாக எச்சிலை வாய் சுரக்க , அது வாயைத் துப்பரவு செய்யும் பணியை மேற்கொள்ள, பற்கள் தமக்கு ஓர் அதாயத்தை தேடிக் கொள்கின்றன். இனிக் காதலி மூதம் கொடுக்க பின் வாங்கினால், இது ஆரோகியமானது என்று அடித்துச் சொல்லி விடுங்கள்.

 

இருப்பது, எழும்புவது, ஓடுவது,  நடப்பது என்று எல்லாவற்றிற்குமே கின்னஸ் புத்தகச் சாதனையாளராகி விட வேண்டும் என்பதே இன்றைய நாட்டு நடப்பாகி இருக்கின்றது. இந்தக் இலட்சணத்தில், முத்தைய்யாக்களும், முத்தம்மாக்களும் பேசாமல் இருப்பார்களா?

 

2004ம் ஆண்டு, காதலர் தினமன்று 5,122 பிலிப்பைன்ஸ் நாட்டு ஜோடிகள், நடு இரவில், ஒன்றாக உட்கார்ந்து, முத்தங்களை பரிமாறி இருக்கிறார்கள். Chile எனப்படும் இலத்தீன் அமெரிக்கா நாட்டில், கடந்த வருட ஆரம்பத்தில், அதாவது 2004 ஜனவரியில், 4,445 ஜோடிகள் முத்தம் படிமாறி சாதனை இப்பொழுது முறியடிக்கப்பட்டிருக்கிறது.

 

பல்லைத் தீட்டிக் கொண்டு யார் இந்தச் சாதனையை முறியடிக்க போகிறீர்கள்?

நீங்களென்ன இவர்களுக்குச் ச்ளைத்தவர்களா?

 

முத்தத்தின் சக்திதான் என்ன?

 

ஆவேசத்தோடு, காதலியின் தலைமுடியைப் பற்றிப் பிடித்து, அவள் முகத்தை உங்கள் முகத்தருகே இழுத்து, செவ்விதழில் உங்கள் இதழ் பதிக்கும்போது நிமிடத்திற்க்கு 26 கலரியைச் செலவழித்து விடுகின்றீர்கள்.

ஒருவர் வேகமாக எத்தனை பேருக்கு முத்தமளிக்க முடியும்?

 

பத்து, நூறு, இருநூறு…..

 

எல்லாமே தப்புக்கணக்குத்தான.

இந் எமகாத பேர்வழி 8 மணி நேரத்தில் 8001 பேருக்கு முத்தம்ளித்து சாதனை படைத்து இருக்கிறார்.  ஆங்கிலேயரான இவர் பெயர் ALFRED WOLFARM. ஆசாமி பயங்கர பேர்வழியாக இருப்பார் போலிருக்கிறது. ஒரு திருவிழாவின் போது இச்சாதனையை நிறைவேற்றிய இந்தக் கில்லாடி, நிமிடட்திற்க்கு 16 பேர் என்று கொஞ்சித்தள்ளி இருந்தாரம்… 1990ம் ஆண்டு செப்டெம்பர் 15 அன்றுதான் இந்தச் சாதனை அரங்கேறி இருக்கின்றது.

 

உலகளாவிய ரீதியாக நடாத்திய போட்டியில்  நீண்ட முத்தம் கொடுத்த ஜோடியாக KARMIT   TSUBERA, DROR ORPAZ என்ற இருவரும் 30 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு, கொஞ்சுதலைத் தொடர்ந்திருக்கின்றார்கள். எதிலுமே, எங்கும் சானை செய்து விடலாம் போலிருக்கிறது.                           சரி,  போனஸாக ஒரு பொன்மொழி.

உலகில் நீ யாரோதான்.  ஆனால் யாருக்கோ உலக்மே நீதான்!

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: