Posted in பொது அறிவு

10 ஆயிரம் அடி உயரத்தில்…

குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிக அதிகமான மலைப் பகுதியில் குரங்குகளை பார்க்க முடியுமா?… முடியும். சீனா திபெத்திய பீட பூமியின் தென்பகுதிகளில் காணப்படும் தங்க நிறக் குரங்குகள் 10 ஆயிரம் அடி உயரமான மலையில் அதிகம் வசிக்கின்றன. இது அபூர்வ வகை இனக் குரங்காகும்.

பனி காலத்தில் இவை கடும் குளிரைத் தாங்க முடியாமல் மலையடிவாரத்திற்கு வந்து விடும்.

இதன் உடல் நீள அளவிற்கு வாலின் நீளமும் இருக்கும். வால் இரண்டரை அடி நீளம் வரை வளரும்.

அண்மையில் சீனாவின் சான்டோங் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் தங்க நிற பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. அந்தக் குட்டியை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்தார்கள்.

ஆசிரியர்: