தேவதாசிமுறை – ஒரு கண்ணோட்டம்

தேவதாசிமுறை – ஒரு கண்ணோட்டம்

சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் ஒரு மும்பை விலைமகளிரிடம் கேட்ட கேள்வி “இந்த விபச்சாரம் இழிவாக தோன்றவில்லையா?”. அதற்கு அந்த பெண் “அனைவரும் எதாவது ஒரு உடலுறுப்பை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறார்கள். நாங்களும் மற்றவர் கண்களுக்கு தெரியாத சில உறுப்புகளை பயன்படுத்தி சம்பாதிக்கிறோம்” என்றாராம்.முதலில் ஞாநி கேட்ட கேள்வியே சரியில்லை என்பேன். வாழ்க்கைச்சூழலும் வறுமையும் விரக்தியும் அவர்களை எப்படியொரு பதிலுக்கு ஆட்படுத்திருக்கிறது எந்த பகுத்தறிவுடைய பெண்ணும் (இன்றைய உலகில் சுகபோகமாக வாழவேண்டி சிலர் விபச்சாரம் செய்கிறார்கள், ஆதலால் தான் பகுத்தறிவுடைய பெண் என்று கூறுகிறேன்) வேண்டும் என்று விபசாரம் செய்யமாட்டாள். இன்றும் பம்பாய், கொல்கத்தா, ஹைத்ராபாத் போன்ற பல நகரங்களில் தெரிந்தே விபச்சாரம் நடக்கிறது. அரசுநிறுவனங்கள் எல்லாம் தெரிந்தும் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. சமுதாயம் பொருளாதாரரீதியாக பெண்களை புறந்தள்ளுவதால் தான் பெரும்பாலும் இத்தகைய அவலநிலை. இதைவிட கொடுமையானது தேவதாசிமுறை. நான் இப்படி கூறக்கூடாது! தூக்கு போட்டு சாவது கொடுமையானதா? விஷம்குடிப்பது கொடுமையானதா? என்றால் தற்கொலையே கொடுமையானது என்று தான் கூறவேண்டி இருக்கும்.

பண்டைய காலங்களில் சில சமுதாயத்தினர் மட்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் தேவதாசிமுறை பற்றி விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டிருந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது என்னால் நம்பமுடியாமல் இருந்தது. எடுத்துக்காட்டாக ஆந்திரமாநிலத்தில் சுமார் 16000 என்றும், கர்நாடகாவில் சுமார் 22000 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. என்ன அநீதி? அக்கிரமம்? இந்துகடவுளுக்கு அர்ப்பணிக்கப்ப்ட்டவர்களாக கூறி நடனமங்கைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் வாழ்பவர்கள் மேல்தட்டுசாதியினரால் உரிமையும் மானத்தையும் இழந்தவர்களாக வாழ்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களே இத்தகைய இழினிலைக்கு ஆளாகியுள்ளனர். எடுத்துக்காட்டாக கர்நாடகத்தில் உள்ள தேவதாசிகள் எல்லம்மா என்னும் பெண்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். இந்தியாவில் உள்ள தேவதாசிகள் அனைவரும் மதத்தின் பெயரால் விபச்சாரத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள். இந்துமதத்தின் பழம்பெருமை பேசும் பலர், இந்த இழினிலையை உணர்ந்தால் நிச்சயம் தலைகுனிவர். இதற்கு எந்தவித காரணங்கள் கூறியும் ஜல்லியடிக்க முடியாது. மத அடிப்படையில் விபச்சாரம் சகிக்க முடியாதது. இது நடந்த, நடக்கின்ற அநீதி. வேதகாலம் சங்ககாலம் தொட்டே இந்நிலை இந்தியாவில் தொடர்ந்து வந்துள்ளது. இப்போதும் நடந்துகொண்டுதான் உள்ளது. எனவே இந்துமத காப்பாளர்கள் தேவதாசிமுறை போன்ற விஷச்செடிகளை மத அடிப்படையிலிருந்து வேரோடு பிடுங்கவேண்டும்.

மனிதாவலம் நீங்கவேண்டும்; பெண்ணடிமை ஒழியவேண்டும்

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: