அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி!

[ayyankali.gif]

  

அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி!

புழுதியை கிழப்பியபடியே கழுத்தில் கட்டியிருந்த பெரிய வெண்கல மணியொலியெழுப்பியபடி இரண்டு வெள்ளை காளைகளும் வண்டியை இழுத்து செல்கிறது. முழுநீள வேட்டியும், தோழில் சுற்றப்பட்ட துண்டும், தலைப்பாகையும் அணிந்த உயரமான அழகிய வாலிபனின் கோபம் காளைகளை வேகப்படுத்துகிறது. பாய்ந்து ஓடும் காளையின் இழுப்பில் வண்டி சந்தையின் பாதையில் மீண்டும் மீண்டும் ஓடுகிறது. ஆண்டாண்டு காலமாக தனது சொந்தங்கள் நடமாட முடியாத சாலையில் வேங்கையாய் அலையும் இந்த இளைஞன் யார் தெரியுமா?

 

19ம் நூற்றாண்டில் புலையன் சாதியில் பிறந்ததால் இவனுக்கும், சகமனிதர்களுக்கும் தெருவில் நடக்கக்கூட உரிமை

மறுக்கப்பட்டவன். அடிமையாக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த இவனோ மாட்டு வண்டியில், முழுவேட்டி கட்டி,

தோழில் துண்டும் தலைப்பாகையுமாக வருவது கண்டு ஆதிக்கச்சாதி நாயர்கள் வெறிகொண்டனர். அவனுக்கு

கொடுக்கும் தண்டனையை பார்த்து எந்த புலையனும் எதிர்த்து எழும்ப கூடாது என திட்டமிட்ட நாயர்கள் கும்பல்

சேர்த்து அவனை வழிமறித்தார்கள். அவனோ சிலிர்த்தெழும் வேங்கையாக இடுப்பில் சொருகியிருந்த நீண்ட

கத்தியை உருவினான். அவனை தொடுபவன் எவனையும் வெட்டுவதாக அடவு கட்டி நின்றான். கோபத்திலும்

உறுதியாக அடவு கட்டி காலை பரவி கையை வீசி நின்ற அவனை கண்டதும் விலகியதுஆதிக்க வெறி கும்பல்.

எதிர்த்து நின்ற மாவீரன் அய்யன்காளி என்னும் மாபெரும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராளி. போராளிகளுக்கு உயிர்

பயமில்லை என்பதற்கு சாட்சியாக நின்றவன். தன்னலமில்லாத விடுதலை வேட்கையென்னும் நெருப்பில் குளித்து

எழும் இந்த நெருப்புப்பறவைகள் எழுந்தால் விடுதலை பிறக்கும். அய்யன்காளி என்ற மாபெரும் நெருப்புக்கனல்

வளர்த்த விடுதலை நெருப்பில் புலையர்கள் எழுந்தனர். திருவிதாங்கூரில் பார்ப்பனீய அடிமைத்தனத்திலிருந்து தலித்

மக்களை மீட்ட மாபெரும் மக்கள் தலைவன் அய்யன்காளி.

 

28 ஆகஸ்டு 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற

ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில்

கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது

குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர்

சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி

மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை

அனுபவித்தனர். பார்ப்பனீய வர்ணாஸ்ரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை மிருகத்திற்கு இணையாக

ஏரில் பூட்டி வயலை உழுதனர். அடிமைகளாக இருந்த அவர்களது உழைப்பில் நாயர்களும், நம்பூதிரிகளும், மன்னனும்

உண்டு கொழுத்து கிடந்தனர். இவை அனைத்தையும் உணர்ந்த அய்யன்காளி விளையாடிய பந்து நாயர் ஒருவனது

வீட்டின் அருகே விழுந்தது. கோபம் கொண்ட நாயர் அய்யன்காளியை மிரட்டினான். பல நாட்கள் யோசித்து,

தெளிவடைந்த மனதுடன் புறப்பட்ட அய்யன்காளி எது மறுக்கப்பட்டதோ அந்த உரிமையை பெற தடையை மீற

எழுந்தார். அந்த எழுச்சி தான் தனியொருவனாக நடத்திய மாட்டுவண்டிப் போராட்டம். முதல் முறையாக அன்று

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை நிலைநாட்டினார். தொடர்ந்து அந்த சாலையில்

மாட்டுவண்டியின் மணிசத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

 

அய்யன்காளி பெற்ற வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு பெற செய்தது மட்டுமல்லாமல்

ஆதிக்கசாதியினரை ஆத்திரமடைய வைத்தது. அய்யன்காளி மாட்டுவண்டி ஓட்ட முடிந்தாலும், மற்ற ஒடுக்கப்பட்ட

மக்கள் தெருவில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. தனது விடுதலை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தின்

விடுதலையே உண்மையான விடுதலையாக இருக்க முடியுமென்பதை அய்யன்காளி உணர்ந்தார். ஒடுக்கப்பட்ட

மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ அதே தெருக்களின்

வழியாக புத்தன் சந்தைக்கு ‘விடுதலை ஊர்வலம்’ போனார். ஊர்வலம் பாலராமபுரத்தில் சாலியார் தெருவை

அடைந்ததும் மறைந்திருந்த ஆதிக்கசாதி கும்பல் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களும்

தங்களது மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதலை தொடுத்தனர். திருவிதாங்கூரின்

ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் ஆயுதப்போராட்டத்தில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான

ஒடுக்கப்பட்ட மக்கள் காயமடைந்தனர். தளராமல் அய்யன்காளி தலைமையில் போராடி ஆதிக்க சாதியினருக்கு

பயத்தை ஏற்படுத்தினார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.

 

சாலியார் வீதி கலகம் பற்றிய செய்திகள் மணக்காடு, கழக்கூட்டம், கன்னியாபுரம் போன்ற பகுதியில் தீயாக பரவ

இளைஞர்கள் தெருக்களில் இறங்கி உரிமைகக்காக போராட துவங்கினர். ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் கலகத்தை

அடக்க ஆதிக்க சக்திகள் எடுத்த முயற்சி பலனளிக்காமல் மேலும் கலவரத்தை பரவச்செய்தது. விவசாய

வேலைகளை புறக்கணித்து மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடத் துவங்கினர். போராடிய

மக்களை பயமுறுத்த ஆதிக்கசாதியினர் தாக்குதலை தொடுத்தனர். அதன் விளைவு போராட்டத்தை மீண்டும்

வலுவடைய வைத்து ஆதிக்கச்சாதி பண்ணைகளை பதற வைத்தது. தாக்குதலிலிருந்து காப்பற்ற ஒடுக்கப்பட்ட

மக்கள் சிறு ஆயுதக்குழுக்களை உருவாக்கினர். விடுதலைக்கான பாதையும் விரிவடைந்தது

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: