வீழ்வதல்ல…

ஒருவர் கூட

இங்கு

உண்மையாய் இருப்பதில்லை..

உண்மையாய் இருக்க விரும்புவதில்லை..

காரணமொன்றில்லாமல்

யாரும் யாரிடமும்

கண நேரம் கூட

பேச தயாராயில்லை..

எல்லா சிநேக புன்னகைகளுக்கு

பின்னும்

ஏதோ ஓர் முகமூடி,

ஏதோ ஓர் எதிர்பார்ப்பு,

ஏதோ ஓர் காரணம்,

சில சமயங்களில் ஏதோ ஓர் வஞ்சனை,

என்று ஏதோ இருப்பதை

உணர முடிந்தாலும்,

நாமும் பதிலுக்கு புன்னகைக்கிறோம்

நமக்கும்

ஏதோ ஓர் முகமூடி,

ஏதோ ஓர் எதிர்பார்ப்பு,

ஏதோ ஓர் காரணம்,

சில சமயங்களில் ஏதோ ஓர் வஞ்சனை,

என்று ஏதோ ஒன்று இருப்பதால்..

நம் வாழ்க்கை பாதையில்

போலி முகங்களே முக்கால்வாசி..

இன்னும் நம்மால்

போலி என்றறியப்படாத முகங்கள்

மீதி கால்வாசி..

இன்னும்

சுயமென்ற ஒன்றை நம்பும்

வெகு சிலர் மட்டும்

உண்மையாய் வாழ முயற்சிக்கின்றனர்..

ஆனால் அவர்களிலும் பலர்

பிழைக்க தெரியாதவன்

பைத்தியக்காரன்

என்ற வசைகளினால்

மாற ஆரம்பிக்கின்றனர் என்று

சமீபத்திய சர்வே ஒன்று

சாபங்களை வீசுகிறது..

என்னால்

ஒன்றை மட்டும்

தைரியமாய் சொல்ல முடியும்..

அந்த வெகு சிலரில்

நானும் ஒருவனென்பதை…

“வீழ்வதல்ல என் சுயம்…”

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: