விடையின்றி வினா

நான் செல்லும்
வழிகளில் – என்
விழிகள் உனை
மட்டும் தேடுவது
ஏன்???எண்ணற்றவரோடு
உரையாடுகிறேன்
உன் வார்த்தைகளுக்கு
மட்டும்
அர்த்தம் தேடுவது
ஏன்???

உன் அருகாமையில்
வந்த நினைவுகளினும்
உன் பிரிவில்
அதன் எண்ணிக்கை உயர்ந்தது
ஏன்???

விரும்புகிறேன் என்றவனின்
காதலை ஏற்கத் தயங்கிய
இதயம்
காதலை சொல்லத் தயங்கிய
உனை நினைந்து
உருகுகிறது
ஏன்???

பிரிவென்ற சொல்லுக்கு
பன்முறை செவிசாய்த்தருந்தும்
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை
ஏன்???

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: