முகம் தெரியாதவள்…

நீ எனது தூக்கத்தில்

மட்டுமே வருகின்ற கனவு

விழித்ததும்

மறைந்து விடுகின்றாய்தென்றலாய் வந்து

எப்பொழுதும் என்னைத்

தொடுகின்றாய்

உன்னைத்

தொட்டுக் கொள்ள

இயலாதவனாய் நான்

மின்னலாய் வருகின்றாய்

முழுதாய் உன் முகம்

காண்பதற்கு முன்பு

மறைந்து விடுகின்றாய்

வாசனையாய்

வருகின்றாய்

எந்தப் பூவில் இருந்தோ

அதுதான் புரியவில்லை

பேசுகின்றாய் திசைகள்

நான்கிலுமிருந்து வரும்

உனது குரலோசை

ஏழிசை கீதமாய்க்

காதில் விழுகின்றது

நீ இருக்கும் திசையோ

சரியாகத் தெரியவில்லை!

என்முன்னே தோன்றாது

என்னோடு வாழ்கின்ற

என்னுயிரே உன்னுருவை…

நித்தமும் நான்

கடற்கரை மணல் மீது

ஒவியமாய் வரைந்து

அழகு பார்த்தேன்

அதைக் கூடப் பொங்கி

வந்த கடலலைகள்

கொன்றழித்து விட்டன!

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: