புன்னகை

வசந்தம் வரும் போது
மரங்களிலே பசுமை புன்னகை
இரவு வரும் போது
அல்லியில் மலரும் புன்னகைஅகிம்சை எனும் போது
நினைவில் வருவது காந்தியின் புன்னகை
மங்கை மனதில் காதல் வந்தால்
அரும்பும் பார் உதட்டோரம் புன்னகை

தாயின் மடி தொட்டிலானால்
சேயின் முகத்தில் புன்னகை
கணவன் வேறு பெண்ணை புகழ்ந்தால்
காணாமல் போவது மனைவியின் புன்னகை

சோதனையை கடந்து சாதனை செய்தால்
வெற்றி புன்னகை
இல்லாதோர்க்கு இயன்றதை கொடுத்தால்
இறைவனுக்கே வரும் புன்னகை

 

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: