நட்பு

 

 

நட்பு என்னும் மழையில் என்னை

நனைய வைத்த நண்பனே

நானறிந்த தமிழில் உன்னை

கவிவரைந்தேன் கொஞ்சமேகற்புடைய அன்பில் என்னை

கரையவைத்த அன்பே -உனை

கவிவரைய பழையபடி

வரவேண்டும் கம்பனே

ஊரறிந்த நாள்முதலாய் உறவுகொண்ட

தோழனே-நான்

வேரறுந்து நின்ற வேளை

விழுதான வீரனே

அன்பு மொழி போசுவதில்

நீஎனக்கு அண்ணனே

அளித்திடா பாச வெள்ளம்

அள்ளிதந்த வள்ளலே

துன்பமான வாழ்க்கையை

திருடிவிட்ட கள்வனே- உன்

தூய்மையான தோழமை சொல்ல என்

கவி ஏழையே

உயிர் கொடுப்பான் தோழா

என்றுரைப்பதெல்லாம் பழமையே

என்னிடத்தில் இருப்பது

உந்தன் உயிர்தானே-அதை

கொடுத்துவிட்டு ஒருகணமெனும் உயிர்

வாழ்வேனா சொல்லடா.

 

 

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: