தாய்ப்பாசம்

சாலையோர மணலில்
விளையாடிய சிறுவயதில்
அறியாத வயதினால்
மண்ணை அள்ளித்தின்ற என்னை
கன்னத்தில் நீயறைந்த தினம்
என்றென்றும் என் நினைவில் நிற்கும்

விபரமறிந்த வயதில்
கால்விரலில் அடிபட்டு
குருதிகொட்டிய என் நிலைகண்டு
என்னிலும் கதறி அழத
காவல் தெய்வமே
உன்னை என் நெஞ்சில்
சுமக்க வேண்டும் என்றென்றும்

பள்ளியில் படித்த வயதில்
காலை ஏழுமணி வரை
தூக்கத்தில் இருக்கும் என்னை
செல்லமாய் தட்டி எழுப்பிய
செழுமை நாட்களை எண்ணி
நினைக்கையில் கவலை மறந்து
இன்பகடலில் மிதக்கிறேன்

நான் தெரிந்தோ தெரியாமலோ
செய்த பல தவறுகளை ஊர்மக்கள்
உன்முன்னே புறம் பேசினாலும்
என்மகன் குணம் பற்றி நானறிவேன்
என்று நீ தரும் பதிலடி நீ
எனக்கு தரும் ஊக்கமருந்து

கல்லூரி காலகட்டத்தில்
மாதம் இருமுறை தந்தையுடன்
மகனின் நலம் காண விடுதிக்கு வந்து
வீட்டில் செய்த உணவினை
மனமகிழ மகனுக்கு
ஊட்டிச்சென்ற உன் வெகுமதியை
எந்த காலனாலும் தொலைக்கமுடியாது

கணிப்பொறி வல்லுநனாக
காலம் சில வாழ்ந்தாலும்
கைநிறைய ஊதியமும்
பெற்று நான் வாழ்ந்தாலும்
அத்தனையும் நீயெனக்கு
போட்ட பிச்சைதானே

காலம் போற்றும் நல்மகனாய்
ஒருசிலருக்கே நான் தோன்றினாலும்
உங்களின் பிரபலம் எனக்கில்லை
நம்மண்ணில் அதுதான்
வேண்டும் என்றென்றும்
அவ்வேளைதான் உந்தன்
பாசப்பிணைப்பு என்னை தொடரும்
உன் அன்பிற்காக ஏங்கும்
சிறுகுழந்தை தான் நானுனக்கு

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: