என் முதல் காதல்

கற்பனை உலகை எட்டும்போது
கவிதை வரவில்லை
கண்கள் உனைக் கண்டபோது
வரிகள் வந்தது – கவிதை
வடிவம் பெற்றது
காகிதத்தில் என் காதலின்
முதல் சுவடு.உன் வார்த்தைச் சிதறல்கள்
என் இதயத்தில் பதிந்த
கவிச்சுவடுகள்.

உன் கண்சிமிட்டும் சந்தத்தில்
என்மனம் திண்டாடியது
காதல் பந்தத்தில் – அன்றுதான்
நான் தடுமாறிய முதல்தினம்.

தூரிகை உதடுகளால் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
இப்போதும்
என்நெஞ்சினில்
நீ ஒரு
மோனாலிசாவாக……..

உன்னோடிருந்த நிமிடங்களை
கடிகாரம்
திரும்பத்திரும்ப காட்டுகையில்
மறக்க முடியவில்லை
உன்னையும் நீ விட்டுச்சென்ற
என் காதலையும்…

நீ விளையாடிய
என் முதல் காதல்
உன் நினைவுகளை சேர்த்துக்கொண்டு
மறுஒளிபரப்பாகுது
இன்னும் என்மனதில்
மெகா சீரியலாக…….

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: