என்பூமியில் ஏதேதோ உன்னைச்சார்ந்து!!!

ஆடி அசைந்து வந்த
ஆழி சூழும் என் பூமி
ஆதாரமிழந்து ஆடுகிறது
அதன் விசையில்!என் வானத்து விண்மீன்கள்
எம்பிக் குதிக்கின்றன.
நீ ஏதாவது உத்தரவிட்டாயா?என் வானத்துக்கான எல்லைகள்
எழும் நிலவின் விழும் ஒளியால்
உன் வானம் நோக்கி நீளமாகின்றன.
உன் முணுமுணுப்புகள் – அதன்
காதில் விழுந்து விட்டதோ?

நீல வண்ண வானமதன்
நீங்கா வெப்பமும் ஒளியும்
நீ பார்த்த பார்வையில்
நிழலாகி விட்டது போலும்
என் பூமி பகலில் இருட்டி வடுகிறது.

என் தோட்டப் பூக்களெல்லாம்
உன் பெயர் சொன்னவுடன் பூக்கின்றன -ஏன்
உன் தோட்ட வண்டுகளையா
உத்தரவிட்டு அனுப்புகிறாய்?

என் புல் வெளியில் பனித்துளிகள்
தினமும் வளர்கின்றன.
ஏன் என்கிறாயா?
பகலில் என் சூரியன்
உன் வானத்தில் உதிக்கிறதே!

ஆதலால் தான் சொல்கிறேன்
உன்னால் பறிபோயாகிவிட்டது
என் பூமியின் உத்தமிப் பட்டம்.
என் பூமியில் ஏதேதோ உன்னைச் சார்ந்து!!! 

 


 

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: