கவிதை

 

 

உன் கண் அசைவே
போதுமடா
காற்றே ஒரு கணம்
கலங்கி நிற்கும்
உன் காந்தக்கண்ணால் தானே
என்னை ஈர்த்தாய்……
உன் சிரிப்பிற்கு
இந்த உலகமே அடிமையடா!
நான் மட்டும்
எம்மாத்திரம்?
இப்படி இங்கு
உனக்காக நான் இருக்க
அங்கு நீ எப்படியோ?

 

கருவறையின் உள்ளே
குருவாக பிரகாசிக்கும்
வருங்கால உலகத்தின்
திருமுடி ராசாவே……….!
சுருண்டு, படுத்து
மருண்டு விழித்து
பாவை போல நீ
படுத்து உறங்குகின்றாய்…!
ஆண்மகனின் வீரியத்தில்
பெண்மகள் கர்ப்பமுற்று
உனைச்சுமந்து பத்துமாதம்
தனைக்கொடுத்து உனை படைத்தாள்….!
தன்னையே பணயம் வைத்து
பத்து மாதம் தவமிருந்து
சத்தாக உண்டு, ஊட்டி வளர்த்து,
பூப்போன்ற கரு உன்னை
பூமியிலே ஈன்றெடுத்தாள்
உருவாக……..!
கருவிலே இருக்கும் நீ
வெளியிலே வருமுன்பே – உன்
கருவிலே காதல் ஜோடியை
உருவாக்கி வைத்துள்ளாய்….!
காதலின் உருவாக்கம்,
கருவறையினுடைய கருவிலே,
கருவினுடைய கருவறயிலேஅ
உருவாகி விடுகின்றது…..!
காதலுக்கு மரியாதை கொடுத்து
சாதலுக்கு விடை கொடுங்கள்.
பாதம் தொட்டு தாயவளின்
பாசத்தை பெற்றிடுங்கள்…..!

 

 

வித்தகனின் மௌன பிரார்த்தனை

நாத்திகம் பேசிய நீ
நாட்டிய பேரொளி ஆகிவிட்டாய்
வித்தகம் கற்ற நான் – உன்
ரசிகனாகி விட்டேன்.
உன் கண்ணின்
காந்த தன்மையா – அல்லது
என் வித்தகத்தின்
உட்பொருளா நீ
தூக்கம் மறந்தேன்
உன் புகழ் பாடினேன்
நண்பர்கள் கூட என்னை
ஏளனம் செய்தனர்
எனக்கு மட்டும்
உன் அபிநயத்தில் மயக்கமா
அல்லது உன் காந்த
பார்வையில் சிக்கிய இரும்பா
தெரியவில்லை.
உனக்கு விடை தெரிந்தால்
இந்த வித்தகனுக்கு பாடம் புகட்டு

 

 

இன்ப உலகம்

 

அழகை
அள்ளித்தெளித்து
அடிவானத்தில்
அதிகாலை வரவேற்கும்!
இதமான காற்றும்
இன்னிசைப்பறவைகளும்!
பச்சை மேனியாய்
பசுந்தரை புல்வெளியும்!
பூக்கத்துடிக்கும்
பூக்களுடன் மொட்டுக்களும்!
மெட்டுக் கட்டும்
சிட்டுக்களும்
மேல் மலையின்
பூங்குயிலும்
போட்டிப்போடும்
இசையின் இன்பம்!
அமைதியாய்
வந்து செல்லும்
அலைகளின்
அழகுக் கோலம்!
இப்படி
எத்தனைக் கோடி
இன்பம்
இக்காலைப் பொழுதினிலே!
அதிகாலை வரவேற்பு
அமிர்தமென்றால்
அதனுடன் போட்டியிடும்
அந்தி நேரம்!
மஞ்சள்
பூசிய முகமாய்
குங்குமம் இட்டு
கொஞ்சி நாணி
இரவை
இழுத்துப் போர்த்தும்
இன்ப மாலை!
ஏழு ஸ்ரங்களுக்குள்
எத்தனை ரரகம்
என்று கேற்கும்
இசையின் வளர்ச்சி!
விஞ்ஞானம்
செய்சும் விந்தை
வியக்க வைக்கும்
வாழ்க்கை முறை!
எத்தனை விதமாய்
இன்பம்
இவ்வுலகில்
மனிதன் படைத்தான்!
உணவு உடை
வீடு எல்லாம்
கலையுணர்வாய்
காட்சி இங்கே!
என்ன இல்லை
இன்பம் பெற?
இவ்வுலகில்
இல்லையாயின்
எவ்வுலகும்
இல்லை இன்பம்!
ஆற்றிலே
நீந்திக் கொண்டு
நீருக்கு ஏங்க வேண்டாம்!

 

 

 

 

 

POSM DISGN எனது இதைய நதியின்

ஓடமாய்

உன் நினைவுகள்

என்றும்

ஓடிக்கொண்டேயிருக்கும்!!!!!!

……………………………………………………………………………………………………………………

Technorati-Tags:

 

 

 

அலைக்கழிவாய் தொடங்கும்

நகரவாழ்வில்

பயண்ம் தொடங்க முடியாமல்

சாத்தப் பட்டிருக்கும்POSM DISGN

கதவுகளின் வழியே

இடுக்குக் கொண்டு பார்க்கிறது

அமைதியின் கண்கள்

பனி பொழியும் இரவொன்றில்

இருள் கவ்வும் பாதையில்

நகரின் மயான அமைதியொன்றை

வெளிச்சமிட்டுக் காட்டுகிறது நிலா                                             

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

 

 

கருவில்லென வளைந்த

இரு புருவங்களின்

எல்லையெங்கிலும்

எம்பூவாய் மலர்ந்திருக்கும்

POSM DISGN

இதழின் கரையோரத்திலும்

சட்டென்று பிறந்த

வியர்வை முத்துக்களில்

பட்டுத் தெறிந்த்

சூரியனை

இரு கைகளால் மெல்லப் பிடித்துச்

சட்டைப் பைக்குள் வைத்துக்கொள்கிறேன்

உன் நினைவாக

       ==========================================================================================   

 

லஞ்சம்

வாங்கினேன்

கைது செய்தார்கள்

கொடுத்தேன்

விடுதலை

செய்தார்கள்                                                                                         

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: