மரண அறிவித்தல்

இலவசமாக மரண அறிவித்தல் செய்ய வீரும்பினால், தொடர்புகொள்ளவும்.

yarl007@yahoo.de

 

ஒளிப்படக் கலைப் போராளியும் பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிப்படக் கலையகப் பொறுப்பாளரும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு தழுவிக் கொண்டார் என அறிவிக்கப்பட்டள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த போராளியான லெப்.கேணல் செந்தோழன் சிறப்பான பாடலாசிரியருமாவார். 
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிக்க இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்.
இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபதுக்கும் அதிகமான இசைப்பாடல்களை பாடியுள்ள இவர் தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

images

யாழ்ப்பாணம் கச்சேரியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அரியகுட்டி கனகலிங்கம் (வவி – ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி) அவர்கள் 25.07.2008 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அரியகுட்டி தெய்வானை தம்பதியினரின் அன்புமகனும், கோபாலன் சின்னம்மா அவர்களின் அன்புமருமகனும், ஞானேஸ்வரியின் அன்புக்கணவரும், கௌசலியா, சுயேஸ்க்கா, லதிக்கா, நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னார் இராசகிளி, நற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சின்னராசா, சரஸ்வதி பங்கஸ்பவனம்(ஜேர்மன்), தில்லைநாயகம், மனோன்மணி ஆகியோரின் மைத்துனரும், வீரசிங்கத்தின் சகலனும்,

மிதுர்சா, நிருக்சனா, ஐதிக்சன்(சப்பிறீனா சோபியா சுவிஸ்), மகிழினியன், யனனி ஆகியோரின் பேரனும், ஆதவன் லதா(சுவிஸ்), சந்திரா, பிரசாத் சிதம்பரகுமார், லூனிதுசாரா, ஜென்னிவரோனா, றோய், யுலிட் ஜேரிமில்ட்டன், அனுசியா(பிரான்ஸ்), சதீஸ், பிரசாத், நவரஸ், நிவாஸ்(ஜேர்மன்) ஆகியோரின் மாமனாரும், கீரன்(மலேசியா), தாரா, தர்சினி(லண்டன்), தமிழினி, அகிலன்(கனடா), பிரசன்னா, சாயிதா ஆகியோரின் சிறிய தகப்பனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.07.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில நடைபெற்று, பூதவுடல் செம்மணி இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

 

 

 

image

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: