ஆ… ஆவ்….. கொட்டாவி!
வழக்கமாக அப்பாவின் ஹிம்சை தாங்கமுடியாமல் கடனே என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாவனை செய்யும்போது, சாப்பாட்டிற்குப் பிறகு, மதியம் முதல் வகுப்பில் ஆசிரியரின் பாடம் சுகமான தாலாட்டாகக் காதில் விழும்போது கொட்டாவி வருவது இயற்கை. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு கொட்டாவி விட்டால் நம்மை அறியாமல் அது தொற்றிக்கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? கொஞ்சம் கொட்டாவி விடாமல் படியுங்கள்!







